Advertisement

வண்டி ஓட்ட கற்றுக்கொள்ளும் கார்!

கூகுள், டொயோட்டா, டெஸ்லா போன்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக, தானோட்டி வாகனங்களை தயாரிக்க முடியும் என்று, சில சிறிய நிறுவனங்களும் கிளம்பியிருக்கின்றன.
அண்மையில், பிரிட்டனிலுள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், செயற்கை நுண்ணறிவுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்தியரான, அமர் ஷா மற்றும் அலெக்ஸ் கென்டால் ஜோடி சேர்ந்து, 'வேவி' என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர்.
தானோட்டி கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ள வேவி, சிறிய காரான 'ரேனால்ட் ட்விஸ்சி' குட்டி காருக்கு தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி சோதித்துள்ளனர்.
கூகுளைப் போல ஏராளமான உணரிகள், நவீன கருவிகளை பொருத்தாமல், ட்விஸ்சியில் ஒரு கேமரா, சில உணரிகள் மற்றும் புதுமையான செயற்கை நுண்ணறிவு மென்பொருளை அமர் ஷா பொருத்தி இருக்கிறார்.
இந்த மென்பொருள் கற்றுக்கொள்ளும் திறன் படைத்தது. ஒரு சோதனையின்போது, சாலையில் ட்விஸ்சி, தானே காரை ஓட்டிச் செல்கிறது. அப்போது, அது சாலையை விட்டு விலகினால் மட்டும், அதில் அமர்ந்துள்ள பயிற்சியாளர் ஸ்டியரிங்கை சரி செய்கிறார்.
அதை புரிந்துகொண்டு, அடுத்த முறை அந்த தவறை தானோட்டி மென்பொருள் செய்வதில்லை. இப்படி, 20 நிமிடங்களுக்குள், அந்த வாகனம் சாலையில் தவறு ஏதும் செய்யாமல், சென்று, திரும்பி வரப் பழகிவிட்டது!
மக்கள் நடமாடும் சாலைகளிலும் ட்விஸ்சியை ஓட்டிப் பழக்க திட்டமிட்டிருப்பதாகச் சொல்கிறார், அமர் ஷா.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    Excellent use of AI(Artificial intelligence).

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement