Advertisement

புகையிலையில் உருவாகும், 'ஆன்டிபயாடிக்' மருந்து!

தொற்று நோய்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்களை அழிக்கும், 'ஆன்டிபயாடிக்' மருந்துகள், கடந்த நுாற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டவை.
ஆனால், பாக்டீரியாக்களும், வைரஸ்களும் ஆன்டிபயாடிக்குகளை எதிர்க்க பழகிவிட்டன என்கின்றனர் மருத்துவர்கள்.
புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கான தேடல் நடக்கிறது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த, லா ட்ரோப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், புகையிலைச் செடியிலுள்ள பூக்களிலிருந்து புதிய வகை ஆன்டிபயாடிக்குகளை உருவாக்க முடியும் என, அண்மையில் அறிவித்துள்ளனர்.
புகையிலைப்பூக்களில், 'என்.ஏ.டி.1' என்ற செல் மூலக்கூறு இருப்பதால், சிலவகை நோய்கள் புகையிலையை தொற்றுவதில்லை. அதே மூலக் கூறுகளை வைத்து ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்கினால், எச்.ஐ.வி., முதல், 'டெங்கு' வரை பல கிருமிகளை தடுக்க முடியும் என, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement