Advertisement

பார்வையில்லாமல் படியேறும் நாலுகால் ரோபோ!

பல வடிவங்களில் ரோபோக்களை படைத்து வருகின்றனர் ரோபோவியல் பொறியாளர்கள்.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தின் விஞ்ஞானிகள், நான்கு கால்களைக் கொண்ட, 'சீட்டா 3' என்ற ரோபோவை சோதித்து வருகின்றனர்.
அது பெயருக்கேற்றபடியே, சிறுத்தை போல ஓடவும், நடக்கவும், தாவவும் கற்றுக்கொண்டு விட்டது. அடுத்த கட்டமாக, அதற்கு பார்வைத் திறன் இல்லாமலேயே, படிக்கட்டுகளில் ஏற பயிற்சி தரத் துவங்கி உள்ளனர்.
ரோபோக்கள் எதிரே உள்ள தடைகள் மீது மோதாமல், நடப்பதற்கு பார்வையை நம்பியிருப்பது உதவாது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
பார்வை மூலம் வரும், தகவல்களை ரோபோ புரிந்துகொண்டு சுதாரிப்பதற்குள், அவை கீழே விழுந்துவிடும்.
எனவே, சீட்டா 3யின் கால்களில் உள்ள ஏராளமான உணரிகளை மட்டுமே வைத்து, நடை பழகுவதற்கு தேவையான புதிய மென்பொருள் நிரல்களை, மாசாசூசெட்ஸ் விஞ்ஞானிகள் உருவாக்கிஉள்ளனர்.
ரோபோவின் கால்கள் இருக்கும் நிலை, கோணம் போன்றவற்றை உணரிகள் உணர்ந்து, வினாடிக்கு, 20 முறை தகவல்களை மென்பொருள் நிரல்களுக்கு அனுப்ப, அந்த மென்பொருள்கள் இடும் கட்டளைப்படி அடுத்த அடியை எடுத்து வைக்கிறது, சீட்டா 3.
இந்தத் திறனைக் கொண்டு சீட்டா 3, விபத்து நிகழ்ந்த இடங்கள், ஆபத்தான தொழிற்சாலைகளில் தெம்பாக நடந்து சென்று வேலை பார்க்க முடியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement