Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஏற்கனவே, அ.தி.மு.க.,வைக் கரைத்துக் கொட்டுவதில், எல்லாரும் முனைப்பு காட்டுவீங்க... இப்ப, பா.ஜ.,வும், 'லீட்' எடுத்துக் கொடுத்திடிச்சி... இனி கேக்கவே வேண்டாம்... எல்லா கட்சிக்காரங்களும், அ.தி.மு.க.,வை கிண்டலடிக்கும் விஷயத்துல ஒண்ணா சேர்ந்துருவீங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி: தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதாக, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். அப்படி என்றால், ஊழல் ஆட்சி நடத்தும், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., ஆட்சியை கலைக்க வேண்டும். ஜெயலலிதா இல்லாத காரணத்தால், தமிழக அமைச்சர் ஜெயகுமார், இஷ்டம் போல் பேசி வருகிறார். தமிழக அமைச்சர்கள் விமர்சிப்பதை பார்க்கும் போது, இவர்கள் விரைவில் கம்பி எண்ணும் நேரம் நெருங்கி விட்டதை காட்டுகிறது.

'இனி எந்த தேர்தல் வந்தாலும், பணம் கொடுத்து ஜெயிக்கலாம் என எண்ணி விட்டாரோ' என்று எண்ணத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் பேட்டி: சட்டசபையில், 110 விதியில் அறிவிக்கப்படும் அறிவிப்புகள் எல்லாம் செயல்பாட்டிற்கு வராது. வரும் லோக்சபா தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், 25 தொகுதிகளில் வெற்றி பெறும். மீதமுள்ள இடங்களில் எங்களது கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும். அப்போது தமிழகம் தான், இந்திய பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் இடத்தில் இருக்கும். அந்த நேரத்தில், தமிழகத்திற்கு தேவையில்லாத திட்டங்களை நாங்கள் தடுப்போம். சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சி, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்.

தமிழக காங்கிரஸ் தலைவர், திருநாவுக்கரசர் பேட்டி: தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டதை கண்டிப்பதாக கூறும், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, தமிழகத்தில் ஆளும் அரசின் முறைகேடுகளை சுட்டிக் காட்டவில்லை. தமிழக மக்கள், ஊழல்வாதிகளாக இருப்பது போல் பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் ஊழல் மலிந்து விட்டது என பேசிய, அமித் ஷாவை, அ.தி.மு.க., கண்டிக்கவில் லை. பா.ஜ., வுக்கு அடிபணியும் ஆட்சியாகவே, அ.தி.மு.க., அரசு உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன் அறிக்கை: 'நீட்' தேர்வு விவகாரத்தில், உச்ச நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடும். அப்படி செய்தால், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களின் வாய்ப்பு பறி போகும். எனவே, மேல்முறையீடு செய்யாமல், தமிழக அரசு, சி.பி.எஸ்.இ., அமைப்பை தடுக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement