Advertisement

'டவுட்' தனபாலு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி: காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதில், திரிணமுல் காங்கிரசுக்கு தயக்கம் ஒன்றுமில்லை. ஆனால், ராகுல் எனக்கு மிகவும் ஜூனியர். யார் பிரதமர் வேட்பாளர் என்பதை, பிறகு பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

டவுட் தனபாலு: எதுக்குங்க இப்படிச் சுத்திவளைச்சு பேசிட்டு... 'என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதாக இருந்தால், காங்கிரசுடன் கூட்டணி வைக்கத் தயார்'னு, வெளிப்படையாகவே நிபந்தனை வைத்தால் என்னங்கறது தான், மக்களின், 'டவுட்!'

---------

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு, இன்னும் காலம் உள்ளது. இந்த மாநிலங்களை எல்லாம், 2019 தேர்தலோடு சேர்க்கக் கூடாது.

டவுட் தனபாலு: பா.ஜ., அல்லாத மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்கள் கூட்டம், இதுவரை, பலமுறை நடந்திருக்கு... அதில் ஏதும் கலந்து கொள்ளாமல், கவனமா தவிர்த்தீங்க... இப்போ, அ.தி.மு.க., ஆட்சிக்கு, பாதியில் இடையூறு ஏற்படும்கற சூழல் உருவானதும், அவர்களுக்கும் சேர்த்து நீங்க வக்காலத்து வாங்குறீங்களே... அ.தி.மு.க., காட்டும் தோழமை என்பது, ஆட்சியைத் தக்க வைக்கத் தானா என்ற, 'டவுட்' வலுவாகுதே...!

--------

தமிழக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்: ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வு நடத்த, மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்படும்.

டவுட் தனபாலு: ஆண்டுக்கு, இரண்டு முறை, 'நீட்' தேர்வு நடத்தப்படும்; இரண்டிலும் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்; அந்த இரண்டில், எந்தத் தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்திருக்கின்றனரோ, அதுவே, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்கற, மத்திய அரசின் முடிவு, நீட் தேர்வில் போதிய பயிற்சி இல்லாத தமிழக மாணவர்களுக்கு, கூடுதல் வாய்ப்பு தானே... அதில், உங்களுக்கு என்ன சிரமம்... மாணவர்களிடம் கருத்துக் கேட்டு, இதில் நிலைப்பாட்டை எடுத்தால் என்னங்கறது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement