Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்: தமிழக சட்டசபை தேர்தல், 2021ல் தான் வருகிறது. எனவே, முன்னதாக தேர்தல் நடத்த வேண்டாம். தேவையெனில், 2024ல், ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை ஏற்கத் தயார்.

டவுட் தனபாலு: 'எப்போ, எந்தத் தேர்தல் வந்தாலும், சந்திக்கத் தயார்'னு, வீராப்பு பேசுவது எல்லாம், வெற்று உதார் தானா... 'அ.தி.மு.க.,வின் நிலைமை சரியில்லை... இடைத் தேர்தல்லயே, மண்ணைக் கவ்வுறோம்... அதனால, முன்கூட்டியே பொதுத் தேர்தலை சந்திக்கும் விஷப்பரீட்சையில் இறங்க மனமில்லை... 2021ல், நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து, அப்புறம் ஒரு முடிவுக்கு வர்றோம்'னு, வெளிப்படையாகச் சொன்னால் என்ன...!

---

பிரதமர் நரேந்திர மோடி: வாரிசு அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ள சிலர், மக்கள் நலனில் ஒருபோதும் அக்கறை செலுத்தியது கிடையாது. ஆனால், பா.ஜ., அப்படிப்பட்ட கட்சி அல்ல.

டவுட் தனபாலு: விரைவில், பொதுத் தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தானில் நடந்த விழாவில், காங்கிரசை இப்படி விளாசி இருக்கீங்க... பா.ஜ.,வைச் சேர்ந்த, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே குடும்பத்தில், அரசியலே இல்லையா... அமைச்சர், எம்.பி., பதவிகளை அனுபவித்த, அவரின் மகன், சகோதரி எல்லாம், எந்தக் கட்சியில் இருக்காங்கன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

---

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி: டில்லி அரசிடம், போலீஸ் துறைக்கான அதிகாரம் இல்லாத போது, குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த, அந்த அரசு உத்தரவிட முடியாது; அது குறித்த விசாரணை குழு அமைக்கவும் அதிகாரம் கிடையாது.

டவுட் தனபாலு: அதிகாரம்னு வந்து விட்டால் மட்டும், வரிந்துகட்டி, வாதங்களை முன்வைக்குறீங்க... இதுவே, ஆம் ஆத்மி ஆளும் டில்லியில், குற்றச் செயல்களும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையும் ஏற்படும் போது, அதற்கும், உங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல், வாய்மூடி நிற்குறீங்களே... இது சரியா என்பது தான், என்னோட, 'டவுட்!'

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement