Advertisement

'டவுட்' தனபாலு

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: வரும் தேர்தலில் எத்தனை கட்சிகள், எத்தனை கூட்டணிகள் வைத்தாலும், மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வரும்''.

டவுட் தனபாலு: நாட்டில் எத்தனை கட்சிகள் இருக்கோ, அத்தனை கட்சியிலும் எத்தனை கோஷ்டி இருக்குன்னு யாராலும் சொல்ல முடியாது. அந்த தைரியத்துல தான், மீண்டும் ஆட்சிக்கு வருவோம்னு நீங்க சொல்றீங்க. இதுல எனக்கு டவுட்டே இல்லை...

---

செய்தி: விஜய் மல்லையாவின் ரூ.963 கோடி சொத்துகள் ஏலம்

டவுட் தனபாலு: ஏலம் ஒரு தரம், ரெண்டு தரம், மூனு தரம்னு சொல்ற மாதிரி, உங்க சொத்து ஏலம்னு அப்பப்ப செய்தி வருது. ஆனா ஏலம் விட்டாங்களான்னு தெரியல. மல்லையா, உங்க கிட்டே ஒன்னுமே இல்லையாங்கிறது தான் என்னோட டவுட்டு...

---

அமைச்சர் ஜெயக்குமார்: அமித்ஷா தமிழகம் வந்தாலும், நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம்.

டவுட் தனபாலு: அமித்ஷா தமிழகம் வர்றதைப் பார்த்து நீங்க ஏன் பதட்டப்படுறீங்க. அடுத்த தேர்தல்ல, ஆட்சியை அவர் மாத்திடுவார்னு, நீங்க பயப்படுறீங்களோ என்பது தான் என்னோட டவுட்டு...

---

பா.ம.க., ராமதாஸ்: மகளிர் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது.

டவுட் தனபாலு: அப்போ, ஆண்கள் வாழ தகுதியுள்ள மாநிலமா தமிழகம் மாறிக்கிட்டு வருதாங்கிறது தான் என்னோட டவுட்டு'...

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement