Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேச்சு: அவரவர் தாய்மொழியில் கல்வியைக் கற்க வேண்டும். கல்வி என்பது வேலைக்காக மட்டுமல்ல. கல்வி கற்பிக்கும்முறை எளிதாக இருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருங்கள். சம்பாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்காதீர்கள். பல வெளிநாட்டு உணவுகள் நமது நாட்டிற்கு வந்தாலும் நமது நாட்டில் தயாரிக்கப்படும் இட்லி, தோசைக்கு உலக அளவில் வரவேற்பு உள்ளது. மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தொடர்ந்து கற்க வேண்டும். பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது. இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். பார்லி.,யில் சட்டம் கொண்டு வருவதால் மட்டுமே ஒரு குற்றத்தைத் தடுத்துவிட முடியாது. மாற்றம் மக்களிடம் வர வேண்டும்.

'உங்க சக அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த போதும் இப்படித்தான் மழுப்பலா பதில் சொன்னீங்க. இப்ப மட்டும் மாத்தியா சொல்லப்போறீங்க' என கேட்கத் தோன்றும் வகையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: வருமான வரித்துறையினர், வரி ஏய்ப்பு தொடர்பாக அவர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில், சோதனை நடத்தி உள்ளனர். அதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. சத்துணவு திட்டத்திற்கு தரமான முட்டை அனைத்து விதமான சோதனைகளுக்கு பின் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. முறைகேடு தொடர்பாக சோதனை நடக்கவில்லை. வருமான வரி சோதனையில் மாநில அரசை சம்பந்தப்படுத்தக் கூடாது.

புதிய நீதிக்கட்சி நிறுவனர் சண்முகம் பேட்டி: சென்னை -- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலையால், தமிழகம் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். இந்த சாலை அமைந்தவுடன் சாலை அமைந்த பகுதிகளில் பல தொழிற்சாலைகள் அமையும். இதனால், பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்து மக்களின் பொருளாதாரம் உயரும். கையகப்படுத்தப்படும் நிலங்களில் 70 சதவீதம் விளை நிலங்கள் இல்லை. எதிர்க்கட்சியினர் அவதுாறு பரப்பி பிரச்னை ஏற்படுத்துகின்றனர். எனவே எட்டு வழிச்சாலை அமைய மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement