Advertisement

டீ கடை பெஞ்ச்

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன் பேரம்



''பார்ல உட்காந்து பேரம் பேசுறாங்கப்பா...'' என கூறியபடி பெஞ்சில் வந்து அமர்ந்தார் அன்வர் பாய். ''பார்ல அரட்டை கச்சேரிதான் நடக்கும். பேரம் பேசுறது யாரு ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.

''கோவை மாவட்டத்துல அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் ஏராளம் பா; ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., மகன் தான் இதற்கு புரோக்கராக செயல்படுறதா பேசிக்கிறாங்க பா. அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கிட்டு ஒரு விளம்பர பலகைக்கு 2 லட்ச ரூபாய்னு பேரம் பேசுறாங்களாம். காந்திபுரத்துல உள்ள ஓட்டல் பார்லதான் பேரம் நடக்குதாம்; முக்கிய அதிகாரியின் மகனும் இதில் கலந்துக்கிறாராம். அவரை வச்சே எம்.எல்.ஏ.,மகன் காரியங்களைச் சாதிக்கிறார்னு பேசிக்கிறாங்க. மாவட்டத்தில அனுமதி இல்லாத 'பார்'களுக்கு அந்த எம்.எல்.ஏ., தான் 'காட்பாதர்'னு சொல்றாங்கப்பா...'' என முடித்தார் அன்வர் பாய்.

''அர்ஜூனனும், கோபாலகிருஷ்ணனும் இன்னைக்கு எங்க வீட்டுக்கு வர்றதா சொல்லிருக்கா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

ரொம்ப நாளா புகைந்தது இப்போ வெளியில வந்துட்டதுங்க...'' என மேட்டரை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.

எந்த விஷயத்தை சொல்ல வாரீர்,'' என கேள்வி எழுப்பினார் அண்ணாச்சி.

மதுரையில அமைச்சர்கள் செல்லுார் ராஜுக்கும், உதயகுமாருக்கும் ஒரே புகைச்சல். அந்த மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் உதயகுமார் பின்னாடி வரிசைகட்டி நிக்குறாங்க... அரசு விழாக்களுக்கு கூட செல்லுார் ராஜு, அவரது உள்ளூர் ஆதரவாளர்களுடன் தான் போயிட்டு வர்றார்...'' என பேசிக் கொண்டிருக்கும் போதே...

அது தெரிந்தது தானே வே,'' என குறுக்கிட்டார் அண்ணாச்சி.

மதுரை விளாச்சேரியில பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் விழா நடந்ததுங்க. உதயகுமாருடன் சேர்ந்து விழவுக்கு போலாம்ணு செல்லுார் ராஜு அவரது அலுவலகத்தில் காத்திருந்தாருங்க. உதயகுமாரோ எம்.எல்.ஏ.,க்கள் புடைசூழ விளாச் சேரிக்கு போயிட்டாரு. அவரிடம் அதிகாரிகள், 'செல்லுார் ராஜுவும் வர்றதா சொல்லியிருக்காரு' என சொன்னாங்க.

'இருக்கட்டும் எனக்கு மற்ற நிகழ்ச்சிகள் இருக்குதுனு' சொல்லிட்டு பரிதிமாற் கலைஞர் சிலைக்கு மாலை போட்டுட்டு புறப்பட்டுட்டாரு. கொஞ்ச நேரம் கழிச்சு சென்ற செல்லுார் ராஜு கடுப்பாகி, 'அவருக்காக தானே காத்திருந்தேன்' என தனி ஆளா மாலை போட்டுட்டு போனாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.

கொதிச்சு போய் இருக்காகவே...'' என அடுத்த விஷயத்திற்கு தாவினார் அண்ணாச்சி.

எந்த துறையில ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.

எந்த துறையிலையும் இல்ல வே... சிவகங்கை மாவட்ட மக்கள் தான். ஏற்கனவே இந்த மாவட்டத்துல துாதை, சூடியூர் பகுதிகள்ல மணல் குவாரி நடத்த அனுமதி கொடுத்தாங்க. அங்கிருந்த மணலை அள்ளி முடிச்சுட்டாங்க வே. பெர்மிட்டுடன் ஒரு தரப்பு அள்ள, சிலர் அனுமதி இல்லாம அள்ளிட்டாங்க. இப்போ அந்த பகுதியில வைகை ஆறு கட்டாந்தரையா இருக்குது வே.

இப்ப மானாமதுரை அருகே வைகையில மணல் இருக்கு. அங்கு குவாரி அமைக்க போறாங்களாம். இங்க மணல் எடுத்தா மாவட்டத்துல வைகை ஆறு பாலைவனமாக போயிரும் வே. அதனால மக்கள் கொதிச்சு போய் இருக்காக வே...'' என கூறி விட்டு அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement