Advertisement

'டவுட்' தனபாலு

காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு: தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பில் இருந்து, நக்மா நீக்கப்பட்டுள்ளார். எனக்கும் மகிளா காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை. அது, மேலிடம் எடுத்த முடிவு.

டவுட் தனபாலு: 'விரைவில், தமிழக காங்., தலைவர் மாற்றப்படுவார்'னு சொல்வீங்க.... இதைச் சொல்ல மாட்டீங்களா... என்னங்க உங்க, லாஜிக்... ஒருவேளை, உட்கட்சி விஷயத்தை உளறக்கூடாதுன்னு, கட்சி மேலிடம் உங்களுக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கோ என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

---

தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர்: தமிழகத்தில் நடைபெறுவது, மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி இல்லை; எம்.எல்.ஏ.,க்கள் தேர்ந்தெடுத்த ஆட்சி. இந்த ஆட்சி, விரைவில் அகற்றப்பட வேண்டும்.

டவுட் தனபாலு: காலங்கால மாக, எம்.எல்.ஏ.,க்களால் தான், ஒரு மாநிலத்தின் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுறாங்க... அவங்களுக்குத் தான் அந்த உரிமை இருக்கு... ஜெ.,வும் அந்த வகையில் தான், முதல்வராக தேர்வானார்... மக்கள், ஜெயலலிதாவுக்குத் தான் ஓட்டு போட்டாங்க என்ற உங்க கருத்தின்படி பார்த்தால், சோனியா மற்றும் இளங்கோவனுக்காகத் தான், காங்கிரசுக்கும் ஓட்டு விழுந்திருக்கும்... அந்தத் தலைமை மாறியதால், இப்போது இருக்கும், காங்., - எம்.எல்.ஏ.,க்கள், பதவி விலகணும்னு சொல்வீங்களா என்ற, 'டவுட்' வருதே...!

---

மனித நேய மக்கள் ஜனநாயக கட்சி, எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி: 2019ல், நடக்கும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வோடு யார் கூட்டணி வைத்தாலும், தமிழகத்தில், 39 தொகுதிகளிலும் அவர்கள், 'டிபாசிட்' இழப்பது உறுதி.

டவுட் தனபாலு: நீங்க எந்தக் கூட்டணியில் இடம் பிடிப்பீங்க; உங்க கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்படுமா என்பதே, பெரும், 'டவுட்'டாக இருக்கு... இதுல, அடுத்த கட்சியின் கூட்டணிக்கு ஏற்படப் போகும் நிலையை எல்லாம், ஆருடம் கணிப்பது சரியா...!

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement