Advertisement

யோகா கற்றுத் தரும் உடை!

யோகாசனம் கற்றுக்கொள்ள விரும்புபவருக்கு, எப்போதும் ஒரு குரு உடனிருந்து, இப்படி செய், அப்படி செய்யாதே என்று சொல்லித்தருவது சாத்தியமில்லை. இதற்கு மாற்று வழியை உருவாக்கியிருக்கிறது 'வியரபிள் எக்ஸ்!'
வியரபிள் உருவாக்கியிருக்கும், 'நாடி எக்ஸ்' என்ற யோகா உடையை அணிந்துகொண்டால், அணிபவர் தவறு செய்யும்போது சுட்டிக் காட்டி திருத்தும்.
எப்படி... நாடி எக்சில், முக்கியமான தசை, மூட்டு பகுதிகளில் வேகமானி போன்ற உணரிகளும், அதிர்வான்களும் பொருத்தப்பட்டுள்ளன. முழங்காலுக்குப் பின் பகுதியில் ஒன்ணரை மணி நேரம் தாக்குப் பிடிக்கும் மின்கலனையும் பொருத்திக்கொள்ளலாம்.
நாடி எக்சை அணிந்து யோகா செய்பவரின் அசைவுகள் பற்றிய தகவல்கள், அவரது அலைபேசியிலுள்ள நாடி எக்ஸ் செயலிக்குப் போகும்.
அந்த செயலி, அசைவுகளை உடனுக்குடன் அலசி, தவறாக இருந்தால், எந்தக் கோணத்தில் கை, கால்களை வளைக்கவேண்டும் என்பதை அதிர்வான்கள் மூலம் உணர்த்திவிடும்.
இப்படி வாரக் கணக்கில் கண்காணித்து, அந்த செயலி மதிப்பெண்களைத் தரவும், புதிய ஆசனங்களை பரிந்துரைக்கவும் வல்லமை கொண்டது. அணிந்துகொள்ளக்கூடிய, எப்போதும் உடனிருக்கும் யோகா குரு!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement