Advertisement

ரத்தப் போக்கை கட்டுப்படுத்த மாத்திரை

உலகெங்கும் ஆண்டுக்கு, 70 ஆயிரம் கர்ப்பிணிகள், பிரசவித்த பிறகு ஏற்படும் உதிரப் போக்கால் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க பரவலாக ஆக்சிடாசின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து, வெப்பத்தால் விரைவில் செயலிழந்துவிடும் தன்மையைக் கொண்டது. இதனால் மின் வசதியும், குளிர் சாதன வசதியும் தொடர்ந்து கிடைக்காத பகுதிகளில், இம் மருந்தை பயன்படுத்த முடிவதில்லை.
அண்மையில் உலக சுகாதார நிறுவனம், கர்ப்பிணிகளின் உதிரப் போக்கை தணிக்க ஒரு புதிய மருந்தை வெள்ளோட்டம் பார்த்துள்ளது.
பத்து நாடுகளில், 30,000 கர்ப்பிணிகளிடம் நடந்த வெள்ளோட்டத்தில் கார்பிடோசின் என்ற புதிய மருந்து, நல்ல பயனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மருந்தை பராமரிக்க, குளிர் சாதனம் தேவையில்லை என்பதால், பல்லாயிரம் கர்ப்பிணிகளின் உயிர் காக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement