Advertisement

டவுட்' தனபாலு

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: தமிழகத்தில், காமராஜர் ஆட்சி விரைவில் அமைய வேண்டும். முதல்வராக வேண்டும் என்ற ஆசை, தகுதி எனக்கு உள்ளது.

டவுட் தனபாலு: தி.மு.க.,வின் ஆட்சி, மெச்சிக்கொள்ளும் வகையில் இருக்காதுன்னு, சொல்ல வர்றீங்களா... அதைக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொன்னால் என்ன... ஆசை, தகுதி இரண்டும் உள்ள மாநிலத் தலைமை கிடைத்த பின்னரும், கொடுக்குற தொகுதிகளைப் பெற்றுக் கொண்டு, கூட்டணி தயவிலேயே, தமிழகத்தில் காலம் தள்ளுவோம்னு, காங்., மேலிடம் ஏன் நினைக்குது... இந்த, 'டவுட்'டை, நீங்களே விளக்கினாத் தேவலை...!

---

பிரதமர் நரேந்திர மோடி: நான் ஒரு மஹாராஜா அல்ல; சாதாரண குடிமகன். மக்களின் சேவகனான என்னை காண, அவர்கள் ஆர்வத்துடன் ஓடி வருகின்றனர். அப்போது, என் பாதுகாப்பு அதிகாரிகளின் தடையையும் மீறி, மக்களை சந்திக்கிறேன். இது மிகவும் உணர்வுப்பூர்வமானது.

டவுட் தனபாலு: 'மாவோயிஸ்ட்களால், அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பிரதமர் மோடிக்கான பாதுகாப்பை அதிகரிக்க, நடவடிக்கை எடுத்தேன்'னு, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சொல்றாரு... நீங்களோ, உணர்வுப்பூர்வமாக யோசித்து, பாதுகாப்பு வளையத்தை மீறுவது சரியா... இதை, அலட்சியம்னு எடுத்துக்கறதா, அரசியல்னு எடுத்துக்கறதா என்பது தான், என்னோட, 'டவுட்!'

---

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா: பருப்பு வகைகள் ஓராண்டிற்கு முன், 130 ரூபாயாகவும், தற்போது, 65 ரூபாயாகவும் உள்ளது. 'ஒரு நாடு ஒரு சட்டம்' என்ற மத்திய அரசின் கொள்கை, வெற்றி பெற்றுள்ளது.

டவுட் தனபாலு: பருப்பு விலை உயர்வு குறித்து முன் கேட்டபோது, 'போதுமான மழை இல்லை... விளைச்சல் குறைவு... பதுக்கல் அதிகரிப்பு'ன்னு, பல்வேறு காரணத்தை சொன்னீங்க... ஆனா, வரியைப் பத்தி, மூச்சே விடலை... இப்போ, ஜி.எஸ்.டி., தான், பருப்பு விலை குறையக் காரணம்னு சொல்வதில், கடைசி வரை உறுதியா இருப்பீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    திமுக கூட்டணி வைத்துக்கொள்ளவிரும்பும் இவர் எப்படி காமராசர் ஆட்சி அமைக்க ஆசைப்படமுடியும் தனியாக நின்று காட்சியைவளர்க்குமெண்ணம் காங்கிரஸ் தலைவர்களுக்கு துளி கூட இல்லை திமுகாவோ அதிமுகவோ பிச்சை போடும் சீட்டுகளுக்கு அடிதடி நடத்துபவர்கள் நிறைந்த ஒரேகட்சி காங்கிரஸ் மட்டுமே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement