Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'எந்த கோப்பும், சந்தேகம் அற, கேள்வியே எழாத வகையில் தயாரித்து அனுப்பாதது, யார் குற்றம்?' எனக் கேட்கத் தோன்றும் வகையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேச்சு: முக்கிய கோப்புகளை, கவர்னருக்கு அனுப்பினால், கேள்வி மேல் கேள்வி கேட்டு, திருப்பி அனுப்புகிறார். அதற்குப் பதிலளித்து, மீண்டும் கோப்புகளை அனுப்பினால், மேலும் சில கேள்விகளை கேட்டு, திருப்பி அனுப்பி விடுகிறார். ஒரே நேரத்தில், அனைத்து கேள்விகளையும் கேட்கலாம். ஆனால், கோப்புகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே, கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு: 'முதுமை, செழுமை நிறைந்த தமிழ்மொழியின், 100 வார்த்தைகளை தினமும் கற்க வேண்டும்' என, டில்லியில் நடந்த விழாவில், 13 ஆயிரம் மாணவர்களிடையே, பிரதமர் மோடி பேசினார். இதுபோல் எந்த பிரதமரும், அங்கீகாரம் அளித்ததில்லை. தமிழ்மொழியை பரப்பும் துாதுவர்களாக, இளைய தலைமுறையினர் இருக்க வேண்டும். மொழி திணிப்பிற்கு, பா.ஜ., மற்றும் மத்திய அரசு இடம் கொடுக்காது. மாறாக, விரும்பி கற்பவர்களை தடுக்க முடியாது.

த.மா.கா., கட்சி தலைவர் வாசன் அறிக்கை: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில், கர்நாடக அரசு தமிழகத்திற்கு, 31.24 டி.எம்.சி., தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது, வறட்சியின் விளிம்பில் இருந்த தமிழக விவசாயிகளுக்குக் கிடைத்திருக்கும் முதல் வெற்றி. கர்நாடக அரசு, ஆணையத்தின் உத்தரவுக்கு செவி சாய்த்து, காலம் தாழ்த்தாமல் நீரை திறந்துவிட வேண்டும். இனி மாதந்தோறும், தமிழகத்திற்கான தண்ணீரை, கர்நாடக அரசு திறந்து விடுவதை, ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

'ரொம்ப நல்லவரு நீங்க... துாக்கத்துல கூட, தமிழகத்தின், 'நலன்' குறித்து மறக்காம இருப்பீங்க போலிருக்கு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொது செயலர் வைகோ பேட்டி: தமிழகத்திற்கு, ஜூலை மாதத்திற்கான தண்ணீரை விடுவிக்கச் சொல்லி, கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு, காவிரியில் நீர் திறக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், கர்நாடகத்திற்கு உள்ளது. நல்லதே நடக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement