Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., - எம்.பி., சிவா, 'சந்தில் சிந்து பாடும் வகையில்' பேட்டி: மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் கவர்னர், ஒரு மாநில அரசு செய்ய வேண்டிய கடமைகளை, ஒரு அமைச்சரோ, முதல்வரோ செய்ய வேண்டியதை செய்வாரேயானால், ஒட்டுமொத்தமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிக்கவில்லை என்பதாகவே பொருள்படும்.

'நீண்ட காலமாக பார்லி., உறுப்பினராக நீங்கள் இருந்ததால், உங்களுக்கு இந்த விஷயம் தெரியுது... பலருக்கும் தெரியலியே... ஆளாளுக்கு அச்சப்பட்டு, கருத்து தெரிவிக்கிறாங்களே...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், காங்., மூத்த தலைவர் வீரப்ப மொய்லி பேட்டி: முன்கூட்டியே லோக்சபாவுக்கு தேர்தல் நடத்துவது குறித்து, பிரதமரோ, எந்த ஒரு கட்சி யோ முடிவெடுக்க முடியாது. அது, அனைத்து கட்சிகளும் சேர்ந்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவு. தேர்தலை முன்கூட்டியே நடத்துவது என்பது, அரசியலமைப்புச் சட்டப்படி மிகவும் முக்கியமான விஷயம். இதில், எந்த ஒரு தனி நபரோ, கட்சியோ தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.

த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: 2015ம் ஆண்டு முதல், இதுவரையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப் பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான படகுகளில் எண்ணிக்கை, 226. இதுவரையில், 42 படகுகள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளதாக, செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு, தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான படகுகள் அனைத்தையும் மீட்டுக் கொண்டு வர, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

ம.தி.மு.க., பொது செயலர் வைகோ பேட்டி: அரசியலுக்கு வருவதற்கோ, புதுக்கட்சி துவங்குவதற்கோ, இந்திய அரசியல் சாசனப்படி, ரஜினிக்கு முழு உரிமை இருக்கிறது. 'ஏன் அரசியலுக்கு வருகிறீர்கள்' என, சில அரசியல் கட்சிகள், அவரிடம் கேட்பது மிகவும் தவறு. மேலும், 'அன்றைக்கு வராமல், ஏன் இன்றைக்கு வருகிறீர்கள்' என, கேட்கும் உரிமையும் யாருக்கும் இல்லை.

அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன் பேட்டி: செயல்படாத ஓர் அரசு தான், இங்கு இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், விசுவாசிகள், ௯௦ சதவீதம் பேர், எங்களோடு தான் இருக்கின்றனர். இந்த ஆட்சி விரைவில் போய்விடும். அதன்பின், மீதியுள்ள தொண்டர்கள், எங்களோடு வந்து இணைந்து விடுவர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement