Advertisement

கப்பலின் எரிபொருள் சிக்கனத்திற்கு

பெரிய கப்பல்களின் எரிபொருள் செலவை அதிகரிப்பது எது? கடல் நீரை கிழித்துக்கொண்டு கப்பல் செல்லும்போது ஏற்படும் உராய்வுதான்.
கப்பல் மிதமான வேகத்தில் செல்கையில், 80 சதவீதம் வரையிலான எரிபொருளும், வேகமாகச் செல்கையில் 40 - 50 சதவீதம் வரையிலான எரிபொருளும், நீர் ஏற்படுத்தும் வேகத் தடையை சமாளிப்பதற்கே செலவாகிறது.
இந்தச் செலவை வெகுவாக குறைக்க, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான, அனிஷ் துதேஜா ஒரு புதிய பொருளை உருவாக்கியிருக்கிறார். 'ஓம்னிபோபிக் கோட்டிங்' என்ற வகை பூச்சுப் பொருளான அது, தெளிவாகவும், ரப்பரைப் போன்ற தன்மையுடனும் இருக்கிறது.
புதிய வகையிலான இந்தப் பூச்சினை கப்பல்களின் வெளிப்பக்கம் பூசினால், நீருடனான உராய்வு வெகுவாகக் குறைந்து, கப்பலின் வேகம் அதிகரிப்பதோடு, எரிபொருள் செலவும் குறையும் என, அனிஷ் துதேஜா ஒரு ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement