Advertisement

பச்சோந்தித் திரை!

வண்ணத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியின் வித்தையை பின்பற்றி, நிறம் மாறும் லேசர் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
பச்சோந்தியின் தோலில் 'இரிடோஸ்போர்' என்ற நேனோ படிகங்கள் உள்ளன.
தன் தோலை விரித்தும், சுருக்கியும், நேனோ படிகங்களின் மீது படும் ஒளியின் தன்மையை மாற்றித்தான், தன் வண்ணஜாலத்தை பச்சோந்தி நிகழ்த்திக்காட்டுகிறது.
அதேபோல, அமெரிக்காவிலுள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு பாலிமர் தாளின் மீது, உலோக நேனோ துகள்களை பதித்து, அதன் மீது லேசர் கதிர் படும்படி செய்கின்றனர். பாலிமர் தாளை சுருக்கி, விரிப்பதன் மூலம் லேசரின் வண்ணமும் மாறுகிறது.
எந்த அளவு பாலிமர் தாளை சுருக்கி, விரித்தால் என்ன வண்ணம் வரும் என்பதை துல்லியமாக கட்டுப்படுத்த முடியும் என்று வடமேற்குப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஒரு ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தொழில்நுட்பம் மிகத் துல்லியமானது என்பதால், நேனோ படிகத் திரையும் லேசர் கதிரும் கொண்ட தொலைக்காட்சி திரை, செல்பேசித் திரை போன்றவற்றை உருவாக்க முடியும் என, அக்கட்டுரையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement