Advertisement

காபி இதயத்தை 'ரிப்பேர்' செய்யும்

காபி அருந்துவதால் ஏற்படும் நன்மைகளுள் ஒன்றாக, இதயத்தின் ஆரோக்கியத்தை அது அதிகரிக்க உதவுவதாகச் சொல்வர். எதனால் அந்த நன்மை விளைகிறது என்பதை, 'பிளாஸ் பயாலஜி' ஆய்விதழில் ஜெர்மானிய விஞ்ஞானிகள் முதல் முறையாக விளக்கியுள்ளனர்.
நான்கு கோப்பை காபியில் உள்ள அளவுக்கு 'காபீன்' உடலில் செலுத்தப்பட்டால், அது இதயத் தசைகளின் செல்களுக்குள் 'பி27' என்ற புரதத்தை செலுத்த உதவுகிறது.
இந்த புரதம் இதயத்தின் திசுக்களில் உள்ள சேதாரத்தை சரி செய்து, தசைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இந்த ஆய்வு, எலிகளின் இதயத்தில் காபீன் ஏற்படுத்தும் நல்ல விளைவைத்தான் ஆராய்ந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement