Load Image
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஆக மொத்தம், அ.தி.மு.க.,வுல தான், ௧௮ பேரும் இருக்காங்கன்னு, 'சீக்ரெட் செல்' மூலமா உங்களுக்குத் தெரிஞ்சு போச்சு... அப்புறம் ஏன், உங்ககூட, ஒட்டிக்கிட்டிருக்கிறதா நாடகம் ஓடுது...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., துணை பொது செயலர் தினகரன் பேச்சு: நன்றி கெட்டவர்கள் ஆட்சி, தற்போது தமிழகத்தில் நடக்கிறது. அ.தி.மு.க.,வை காப்பாற்ற, 18 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவிகளை தியாகம் செய்துள்ளனர். மக்கள் விரும்பும் ஆட்சியை, அ.ம.மு.க., தரும். அப்போது இந்த, 18 பேரும், அமைச்சர்களாக நியமனம் செய்யப்படுவர்.

தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேச்சு: மதுரையில், 1,500 கோடி ரூபாயில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனையால், டில்லியில் கிடைக்கும் அதே மருத்துவ வசதி, நமக்கும் கிடைக்கும். இதன்மூலம், 19 மாவட்ட மக்கள் பயன் பெறுவர். இந்த மருத்துவமனையை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமோ, ஸ்டாலினோ கொண்டு வரவில்லை; ஜெயலலிதா ஆட்சியில் தான் வந்துள்ளது.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியன் பேட்டி: இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் இடங்களுக்கான வாடகை, அரசியல் தலையீடுகளால், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. தற்போதைய சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வாடகையை உயர்த்தினால், கோவில்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். மீனாட்சி அம்மன் கோவில் உட்பட, முக்கியமான கோவில்களுக்கு சொந்தமான, 7 லட்சம் ஏக்கர் நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்க, உறுதியான நடவடிக்கை இல்லாதது, ஏமாற்றம் அளிக்கிறது.


பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா பேட்டி: காவிரி மேலாண்மை வாரியத்துக்கு, கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்காத ஒரே ஒரு சந்தர்ப்பம், எடியூரப்பா முதல்வராக இருந்த, 56 மணி நேரம் தான். அவரை நீக்கிவிட்டு, குமாரசாமியை முதல்வராக்கிய காங்கிரசை, தி.மு.க., அதன் கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும். வெளியேற்றவில்லை என்றால், விவசாயிகளின் விரோத கட்சி, தி.மு.க., என்பதை, மக்கள் புரிந்து கொள்வர்.

'உங்கள் பேச்சில் இருக்கிற உண்மை, ஏன் மத்தவங்களுக்குத் தெரிய மாட்டேங்குது...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி பேட்டி: சேலம் - -சென்னை பசுமை வழிச்சாலை திட்டம், காலத்தின் கட்டாயம். 10 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயியிடமிருந்து, 5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினால் கூட, அவர்களுக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை. ஏனெனில், அங்கு சாலை அமைந்தால் நிலத்தின் மதிப்பு, பல மடங்கு உயரும். ஆனால், ஓரிரு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளிடம் நிலத்தை எடுத்தால், அவர்களுக்கு, 15 மடங்கு வரை கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும். நியாயமான இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லை. அதனால் தான், நிலத்தை வழங்க, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.



வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement