Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அசத்தும் காற்று


காற்று வீசும் காலத்தில் அதிக காற்று, உடல் வலியை ஏற்படுத்தும். மின்விசிறியின் கீழ் அமர்பவர்களுக்கு உடம்பின் வலி அதிகரிக்கும் என்பது இயற்கை மருத்துவத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மின் விசிறியை தவிர்ப்பதால், உடலில் வலி குறைகிறது. மின் விசிறியின் சுழற்சி, நம் ரத்த ஓட்டத்தின் இயல்பான வேகத்தைக் குறைக்கிறது என்கிறது இயற்கை மருத்துவம். இயற்கை மருத்துவ சிகிச்சை வார்டுகளில் மின் விசிறியை பயன் படுத்துவது இல்லை. அலோபதியில் இருதய கோளாறுகள், ரத்த அழுத்த நோயாளிகளை வேர்க்க விடக்கூடாது. மின் விசிறியை பயன்படுத்த வேண்டும் என்கிறது.


தகவல் சுரங்கம்

முதல் பெண் அமைச்சர்



இந்தியாவின் முதல் சுகாதார துறை அமைச்சர் ராஜ் குமாரி அம்ரித் கவுரின் வண்ணக் கனவாக, அனைவருக்கும் ஒரே மாதிரியான மருத்துவ தரம் என்பது இருந்தது. இதனை செயலுக்கு கொண்டு வரும் வகையில் தான் 1956ல் முதன்முதலில் டில்லியில் 'எய்ம்ஸ்' மருத்துவமனையை தொடங்கினார். எய்ம்ஸ் உயர் அலுவலர்கள், செவிலியர்களுக்கான சுற்றுலா கால விடுதியாக தமது மூதாதையர்கள் வாழ்ந்த சிம்லா விடுதியை நன்கொடையாக தந்தார். இவர் அரச குடும்பத்தை சேர்ந்தவர். முதல் பெண் மத்திய அமைச்சர் என்ற சிறப்பும் பெற்றவர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement