Advertisement

சென்னையில் ஓவிய கண்காட்சி

தமிழ்நாடு ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சென்னை லலித் கலா அகாடமியில் அற்புதமான ஓவிய கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது.
65 ஓவியர்கள் வரைந்த சுமார் 300க்கும் அதிகமாக ஓவியங்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.


கோவில் சிற்பம் உயிர்பெற்றால் என்ன நடக்கும்,க்யூபிக்ஸில் ஜல்லிக்கட்டு,முப்பரிமாண ஓவியம்,அணிகலன் அணிந்த ஓவியம்,சுற்றுச்சுழல் பாதிப்பை விளக்கும் ஓவியம்,சிவனின் நாட்டியத்தை விளக்கும் ஓவியம் என்று ஓவியங்கள் வித்தியாசமாகவும் புதுமையாகவும் இருக்கிறது.கண்காட்சியில் உள்ள இந்த ஓவியங்கள் விற்பனைக்கும் கிடைக்கும்.


கடலில் பெய்யும் மழையாக,காட்டில் காயும் நிலவாக இந்த அற்புதமான ஓவிய கண்காட்சி பார்வையாளர் கூட்டம் அதிகமின்றி காணப்படுகிறது.பள்ளி கல்லுாரி மாணவர் மற்றும் ரசனையை விரும்பும் பொதுமக்கள் பெருந்திரளாக வந்து கண்காட்சியினை ரசி்க்கவேண்டும்.கண்காட்சி குறித்து விவரம் அறிந்து கொள்வதற்கான எண்:9941322175


-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement