Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

மணப்பெண் மாத்திரை



ஆரோக்கியமான பெண்ணால் தான் ஆரோக்கியமான குழந்தைகளை பெற முடியும். கருவில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிறவிக் கோளாறுகளைத் தவிர்க்க, திருமண நிச்சயம் ஆனவுடன் மணப்பெண்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் போலிக் ஆசிட் மாத்திரைகளை சாப்பிட வேண்டும். எனவே இதனை 'நிச்சயதார்த்த மாத்திரை' என்கின்றனர். சிறுவயதில் இருந்தே காய்கறிகள், பசலைக்கீரை, பீன்ஸ், புரோக்கோலி, பப்பாளி, ஆரஞ்ச், ஈஸ்ட், முளைக்கட்டிய பயறு, சிக்கன் வகைகளை உண்பதால், இந்தப் பிரச்னைகளில் இருந்து போலிக் மாத்திரைகள் இல்லாமலே தீர்வு காணலாம்.

தகவல் சுரங்கம்

துணைநிலை கவர்னர்



இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மாநிலங்கள், யூனியன்களுக்கு இல்லாத சிறப்பு அதிகாரம் டில்லி துணைநிலை கவர்னருக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியல் சாசனத்தில் 239, 239ஏ, 239பி ஆகிய பிரிவுகளில் துணைநிலை கவர்னருக்கான அதிகாரங்கள் விளக்கப்பட்டுள்ளன. காவல்துறை, சட்டம் ஒழுங்கு ஆகிய துறைகளில் இவரே இறுதி முடிவு எடுக்க முடியும். மக்களால் தேர்வான அரசு ஆட்சி செய்தாலும் நலத்திட்டம், உயர் அலுவலர்கள் நியமனம், இடமாற்றம் போன்றவற்றுக்கு துணைநிலை கவர்னரின் இறுதி ஒப்புதல் தேவை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement