Advertisement

கூகுளின் புதிய, 'குவான்டம்' சில்லு!

'மூர்' விதிப்படி , சிலிக்கன் சில்லுகளின் கணித் திறனுக்கான எல்லை நெருங்கி விட்டது. அடுத்து அந்த எல்லைகளை தகர்க்க குவான்டம் சில்லுகள் உதவக்கூடும் என, பல காலமாக பேசி வந்தனர் கணினி வல்லுனர்கள்.
பேச்சோடு நிற்காமல், ஐ.பி.எம்., இன்டெல் போன்றவை, குவான்டம் சில்லுகளை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தின. இவை வர்த்தக ரீதியில் இன்னும் உற்பத்தி செய்யப்படவில்லை. என்றாலும், குவான்டம் சில்லு சாத்தியம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அண்மையில கூகுள், 'பிரிஸ்டில்கோன்' என்ற குவான்டம் சில்லினை சோதனைக் கூடத்தில் உருவாக்கியிருக்கிறது.
சிலிக்கன் சில்லுகள் தகவல்களை, 0 மற்றும், 1 ஆகிய நிலைகளை வைத்தே குறிக்கின்றன. இதை 'பிட்' என்பர். ஆனால் குவான்டம் சில்லுகளில் 'கியூபிட்' முறை பயன்படுத்தப்படுகிறது. அதாவது, 00, 01, 10, 11 ஆகிய நான்கு குறியீடுகள் இருக்கும்.
இதனால், இந்த சில்லுகள் தகவல்களை அலசி அதிவிரைவில் விடை சொல்லும் திறன் படைத்தவையாக இருக்கின்றன. இன்று உலகின் முன்னணி அதிதிறன் கணினிகளைவிட இவை வேகமும், தகவல் அலசும் திறனும் கொண்டவை. பிரிஸ்டில்கோன் சில்லின் தகவல் அலசும் திறன், 72 கியூபிட்.
ஜனவரியில் இன்டெல் உருவாக்கிய 'டேங்கில் லேக்' என்ற குவான்டம் சில்லின் திறன், 49 கியூபிட்கள்தான். சந்தைக்கு வரும் முன்பே குவான்டம் சில்லுப் பந்தயம் துவங்கி விட்டது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement