Advertisement

பனி உருகுவதால் உயரும் கடல் மட்டம்!

பூமி சூடேற்றத்தால் துருவங்களில் பனிப்பாறைகள் உருகுகின்றன என்பது, பள்ளிச் சிறார்களுக்குக் கூடத் தெரியும். ஆனால், எந்த அளவுக்கு பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன? அண்மையில் சர்வதேச அளவில், 40 அமைப்புகளைச் சேர்ந்த, 84 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவுகள், கவலை தரும் புள்ளிவிபரங்களை தந்துள்ளன.
'பனிப் பாறை எடைச் சமநிலை குறித்த விரிவான ஒப்பாய்வு' என்ற அந்த ஆய்வின்படி, அன்டார்டிகாவில் தற்போது ஆண்டுக்கு, 159 பில்லியன் டன்கள் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன.
இதன்படி உறைந்த கண்டமான அன்டார்டிகாவிலிருந்து கடந்த, 25 ஆண்டுகளில் மட்டும், 2.7 ட்ரில்லியன் டன் பனிப் பாறைகள் உருகி கடலில் கலந்துள்ளன. இதனால், உலக அளவில் கடலின் மட்டம், 7.6 மில்லி மீட்டர் உயர்ந்திருக்கிறது.
உலகெங்குமிருந்து, 24 செயற்கைக்கோள்கள், துருவப் பகுதிகளை தொடர்ந்து எடுத்த புகைப்படங்கள், விஞ்ஞானிகள் குழு நேரடியாக துருவப் பகுதிகளில் செய்த கள ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில், இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பனிப் பாறை உருகி கடலில் கலக்கும் வேகம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என, விஞ்ஞானிகள் எச்சரித்திருப்பது, சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் துாக்கத்தைக் கெடுத்துள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement