Advertisement

மின்சார பைக்

கர்நாடகாவிலுள்ள ஹூப்ளியில் தயாராகும் 'மன்காமே ஈ.பி.-1' ஒரு முறை சார்ஜ் செய்தால், 500 கி.மீ., தொலைவு பயணிக்கும். அதாவது ஒரே சார்ஜில், சென்னையிலிருந்து கோவைக்கு மணிக்கு, 82.5 கி.மீ., வேகத்தில் பயணிக்க முடியும் என்கிறார் இதன் நிறுவனரான, ஸ்வப்னில் மன்காமே.
'சில வெளிநாட்டு பைக் இணைய தளங்கள் இது உண்மையெனில், இவ்வளவு குறைந்த விலையில், இத்தனை துாரம் போகும் மின்சார பைக் இதுவாகத்தான் இருக்கும்' என்று மெச்சியுள்ளன.
மன்காமேயின், 500 கி.மீ., மகிமை, அதன், 80 கிலோ எடையுள்ள சூப்பர் கூல்டு சாம்சங் மின்தேக்கியில் இருக்கிறது. வண்டியின் மொத்த எடை, 180 கிலோ தான். இந்தியாவில் பெட்ரோல் விலை விஷம் போல ஏறுவதால், 8.73 லட்சம் ரூபாய் கொடுத்து, இந்திய ஸ்போர்ட் பைக் பிரியர்கள் இதை வாங்குவர் என, பைக் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement