Advertisement

மின்சார மயமாகும் வாகனங்கள்: மூன்று சக்கர மின் கார்

ஐந்து பேர் அமரக்கூடிய பெரிய காரில் ஒத்தை ஆளாக ஓட்டிக்கொண்டு போவதா என்ற குற்ற உணர்வு உள்ளவர்களுக்கு, கனடாவின் வான்கூவர் நகரில் 'எலெக்ட்ரோ மெக்கானிகா' தயாரிக்கும், 'சோலோ ஈ.வி' என்ற மூன்று சக்கர மின் கார் உதவும்.
முன்பக்கம் இரு சக்கரங்கள், பின் பக்கம் ஒரு சக்கரம். பின் சக்கரத்தில் இணைக்கப்பட்டுள்ள 82 எச்.பி.,
சக்தியுள்ள மின் மோட்டாருக்கு, 17.3 கே.வி.எச்., லித்தியம் அயனி மின்கலன் மின் சக்தி தருகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால், 161 கி.மீ., துாரம் வரை செல்கிறது சோலோ.
செப்டம்பரில், 10.5 லட்சம் விலைக்கு விற்பனைக்கு வரவிருக்கும் இது, அமெரிக்காவில் மட்டும் அடுத்த மூன்று ஆண்டுகளில், 75 ஆயிரம் வண்டிகளை விற்க திட்டமிருக்கிறது. காரின் வசதி கொண்ட மின்சார பைக் என்பதுதான் இதன் தாரக மந்திரம். ஒரே ஆள்தான் இதை ஓட்ட முடியும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement