Advertisement

அதிகரிக்கும் சூரிய மின்சக்தியால் சிக்கல்!

இன்றைய தேதிக்கு, மாற்று எரிசக்தி துறையில் வேகமாக வளர்வது மின் சக்தி தான். சர்வதேச சக்தி முகமை (ஐ.இ.ஏ.,) வெளியிட்டுள்ள ஆய்வின்படி பல நாட்டு அரசுகள் சூரிய மின் சக்தி தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருவதால் இந்த நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், நல்லதிலும் ஒரு சிக்கல் ஏற்படக்கூடும் என அந்த ஆய்வு எச்சரித்து உள்ளது.
என்னவாம்? சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கும்போது அதை சேமித்து வைக்க போதிய வசதி இல்லாமல் போகக்கூடும்.
எனவே, சூரிய மின் சக்தியை சேமிப்பது மற்றும் வினியோகிப்பதற்கான தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என்கிறது, ஐ.இ.ஏ., ஆய்வு. உதாரணத்திற்கு, சூரிய மின் உற்பத்தி உச்சத்தில் இருப்பது மதிய வேளைகளில் தான்.
அதே சமயம், மின்சார பயன்பாடு மிகக் குறைவாக இருப்பதும் மதிய வேளையில் தான். இந்த முரண்பாட்டை தவிர்க்கவும், விரயத்தை குறைக்கவும் போதிய மின் சேமிப்பு ழில்நுட்பங்களை நிறுவவேண்டும்.
அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவும், சீனாவும் சூரிய மின் உற்பத்தியில் உலகிலேயே முன்னணி நாடுகளாக இருக்கும் எனவும், ஐ.இ.ஏ., பாராட்டியிருக்கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement