Advertisement

சீனாவின் புதிய விண் நிலையம்

அண்மையில் தான் சீனாவின் விண்வெளி நிலையமான டியான்கோங்- 1 கடலில் விழுந்தது.
இந்த கரும்புள்ளியை துடைக்க, சீனா, 2019ல் ஒரு விண் நிலையத்தை ஏவ திட்டமிட்டுள்ளது. 2022 முதல் இயங்கத்துவங்கும் இந்த நிலையத்தில் ஆய்வுகள் செய்ய, பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது சீனா.
ஐ.நா., சபைக்கான சீன துாதர் ஷி ஜோங்ஜுன் இதற்கான அழைப்பை விடுத்திருக்கிறார். 'சீன விண்வெளி நிலையம் சீனாவுடையது மட்டுமல்ல, அது இந்த உலகிற்கானது. இதில் சிறிய நாடு முதல், பெரிய நாடு வரை எந்த நாடும் பங்கேற்கலாம்' என, அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையத்தில் என்ன விதமான ஆய்வுகளை செய்ய விருப்பம் எனத் தெரிவித்து அரசுகளும், தனியார் அமைப்புகளும் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் அறிவித்திருக்கிறார். விண்ணப்பங்களுக்கான கடைசி தேதி ஆகஸ்ட், 31.
இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோ, பல ஆண்டுகளாக வெளிநாட்டு அரசு மற்றும் தனியார் அமைப்புகளுக்கு, செயற்கைக் கோள்களை ஏவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement