Advertisement

நிலாவில் தொழிற்சாலை: அமேசான் அதிபர் திட்டம்

பூமியில் கனரக உற்பத்தித் தொழில்களை இனிமேல் செய்யக்கூடாது என, சர்வதேச விண்வெளி மேம்பாட்டு மாநாட்டில் அறிவித் திருக்கிறார் 'அமேசான்' அதிபர் ஜெப் பெசோஸ்.
பின் எங்கே உற்பத்தி செய்வது... நிலாவில் தான்! இதற்கான ஆரம்பகட்ட பணிகளை தனது ப்ளூ ஆரிஜின் என்ற விண்வெளி அமைப்பின் மூலம், 2020ல் செய்யவிருப்பதாகவும் பெசோஸ் அறிவித்து அசத்தியிருக்கிறார்.
பூமியிலிருந்து மூன்று நாள் பயணத்தில் நிலாவில் தரையிறங்க முடியும். நிலாவின் சூரிய ஒளி எட்டாத இரு துருவங்களில் உறைந்த நிலையில் நீர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.
நிலா மெதுவாக சுழல்வதால் சூரிய ஒளி அதிக நேரம் அந்த துணைக் கோள் மீது விழுகிறது. எனவே சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து, அதன் மூலம் கன ரக தொழிற்சாலைகளை இயங்க வைக்க முடியும் என்பது பெசோசின் திட்டம்.
இதற்காக அமெரி க்காவின் நாசா, ஐரோப்பாவின், ஈ.எஸ்.ஏ., ஆகிய விண்வெளி அமைப் புகளிடம் கூட்டுச் சேர தயாராக இருப்பதாகவும், அதற்கு அவர்கள் மறுத்தால், ப்ளூ ஆரிஜினே விண்வெளியில் தொழிற்சாலை அமைப் பவர்களுக்கு உதவிகள் செய்யும் நிறுவனமாக மாறி ராக்கெட்டுகள், மூலப் பொருட்களை அனுப்பும் வர்த்தக சேவையை செய்யும் என்றும் பெசோஸ் அறிவித் துள்ளார்.
“பூமியைவிட்டு நாம் வெளியேறத்தான் போகிறோம். அடுத்த 100 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் பூமியிலிருந்து நிலாவுக்கு போவதும் வருவதும் சகஜமாகிவிடும்” என, ரொம்ப கூலாக தெரிவித்தார் பெசோஸ்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement