Advertisement

பக்க வாத்தியம்

'லேட்டா' ஏன் வரணும்... தலைதெறிக்க ஓடணும்!

சென்னை, மின் வளாகத்தில் உள்ள, மின் நுகர்வோர் சேவை மைய கட்டடத்தை ஆய்வு செய்ய, மின் வாரிய தலைவர் விக்ரம் கபூரும், இணை மேலாண் இயக்குனர் ஸ்ரீதரும் வந்தனர். காலை, 10:50 மணிக்கு, தலைமை அலுவலக கட்டடத்தில் இருந்து, சேவை மையத்திற்கு நடந்தபடி சென்றனர். உடன் சென்றவர்கள், எதிரே வரும் வாகனங்களை நிறுத்தினர்.வழக்கம் போல் சிலர், பணிக்கு தாமதமாக வந்தனர். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பார்த்ததும், தங்கள் வாகனங்களை திருப்பி, 'துண்டை காணோம்... துணியை காணோம்' என்ற சொலவடைக்கு ஏற்றாற்போல், வந்த வழியே தலைதெறிக்க திரும்பி ஓடினர்.இதை பார்த்த பெண் ஊழியர் ஒருவர், 'வயித்துக்கு சோறு போடுற அலுவலகத்திற்கு, சரியான நேரத்திற்கு வந்தால், அதிகாரிகளை பார்த்து, இப்படி ஏன், ஓடி ஒளிய வேண்டும்...' எனக் கூற, அங்கிருந்த பாதுகாவலர்கள் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    நூற்றுக்கு அறுபதுவிழுக்காடு ஊழியர்கள் தாமதமாகவேதான் பணிக்கு வருகின்றனர் விறல் ரேகைமூலம் வருகைப்பதிவு வைத்தால் இவர்கள் கதி அதோகதிதான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement