Advertisement

பக்க வாத்தியம்

'டி.எஸ்.பி., நிற்பதை பார்த்தா பரிதாபம்!'

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் அறிவித்து இருந்தனர். இதில், 200க்கும் அதிகமானோர் பங்கேற்பர் என, எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு ஒருவர் தகவல் அளித்தார். இதையடுத்து, டி.எஸ்.பி., நடராஜன் தலைமையில், 70க்கும் மேற்பட்ட போலீசார், காலை, 9:30 மணிக்கே குவிக்கப்பட்டனர்.போலீசார் கால்கடுக்க காத்திருந்தும், மதியம், 12:00 மணி வரை, யாரும் வரவில்லை. மதியம், 12:15 மணிக்கு, அந்த அமைப்பைச் சேர்ந்த, ஆறு பேர் கொடிகளுடன் வந்தனர். சிறிது நேரம் கோஷமிட்ட அவர்களை, கைது செய்து போலீசார் வாகனத்தில் ஏற்றினர்.கடுப்பான போலீஸ்காரர் ஒருவர், 'தனிப்பிரிவு ஏட்டு ஒருவரின் தவறான தகவலால், ஆறு பேருக்காக, 70 பேர், மூன்று மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று; எதையும் தீர விசாரிக்கமா, டி.எஸ்.பி.,யும் வந்து நிற்கறத பார்த்தா பரிதாபமாக இருக்கு' எனக் கூற, மற்ற போலீசார் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கோழியை அடிக்க ஏ கே 47 அத்தனை காவலர்களின் நேரம் வீண்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement