Advertisement

'டவுட்' தனபாலு

ம.ஜ.த., கட்சியின் கர்நாடக மாநில தலைவர் குமாரசாமி: நான், கிங் மேக்கராக இருக்க மாட்டேன். கர்நாடக மக்களின் ஆதரவுடன், கிங் ஆவேன்.

டவுட் தனபாலு: 2016 சட்டசபை தேர்தலின்போது, இதே வசனத்தை, எங்க ஊரிலும் ஒருத்தர் சொல்லிட்டு இருந்தாரு... ஆனா, அவர் தலைமை வகித்த, மக்கள் நலக் கூட்டணி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறலை... இருந்தாலும், பதவி ஆசையை, இப்படி பகிரங்கமா சொல்லும் உங்களை எல்லாம், பாராட்டியே ஆகணும் என்பதில், 'டவுட்'டே இல்லை...!
----
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்: தமிழகத்தில், டாஸ்மாக் கடைகளை ஒட்டுமொத்தமாக மூட வேண்டும் என்பது தான், எங்களின் கோரிக்கை.

டவுட் தனபாலு: எதற்கெடுத்தாலும், 'எங்கள் சிந்தனை எப்போதும், தேசிய அளவில் தான் இருக்கும்; நாட்டின், 85 சதவீத மாநிலங்களில், எங்க ஆட்சி தான் நடக்குது'ன்னு, பெருமிதம் பேசும் நீங்க, எத்தனை மாநிலங்களில், மதுவிலக்கை அமல்படுத்தி இருக்கீங்க... ஊருக்கு உபதேசம்கறது, இது தானா என்பது தான், மக்களின், 'டவுட்!'
-----
ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ்: என்னை, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில் இருந்து அனுப்பப்படுவதன் பின்னணியில், மாபெரும் சதி உள்ளது.

டவுட் தனபாலு: கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நீங்க, உடல் நலக்குறைவால், ராஞ்சியில் உள்ள, 'ரிம்ஸ்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டீங்க... அந்த மருத்துவமனையின் பரிந்துரைப்படி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டீங்க... அங்கு உங்களை, டாக்டர்கள் தேற்றிவிட்டாங்க... அதன்பின்னரும், அங்கேயே தான் இருப்பேன்னு சொல்வது, எந்த வகையில் நியாயம்... 'சிறைக்குச் செல்ல விருப்பமில்லை'ன்னு, வெளிப்படையாகச் சொன்னால் என்னங்கறது தான், மக்களின், 'டவுட்!'

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement