Advertisement

சுருக்கெழுத்து படியுங்க வேலை இருக்கு தெரிஞ்சுக்குங்க..




1br@@ கிட்டத்தட்ட மூன்றரை லட்சத்திற்கும் அதிகமான சுருக்கெழுத்தாளர்களை உருவாக்கியதுதான் சென்னை தி.நகரில் உள்ள சுருக்கெழுத்தாளர்கள் அமைப்பு.


கடந்த 80 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் இந்த அமைப்பு ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் நோக்கோடு துவக்கப்பட்ட இந்த அமைப்பில் படித்தவர்கள் பலர் இ்ன்று மத்தய மாநில அரசு ஊழியர்களாக இருக்கின்றனர்.


இப்போதுள்ள தலைவர் எஸ்.ஆர்.சிவசுப்பிரமணியம் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு பயிற்சியுடன் மாணவர்கள் மேலும் பல விஷயங்களை கற்றுக்காள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பவர்.


இதன் காரணமாக சி,சி+,ஜாவா,நெட்,டிடிபி,ஆன்ட்ராய்டு டிரெய்னிங்,எம்எஸ் ஆபிஸ்,ஆபிஎஸ் ஆட்டோமேஷன்,டாலி,ஸ்போக்கன் இங்கிலீஷ்,ஸ்போக்கன் ஹிந்தி,பெர்சானலிட்டி டெவலப்மெண்ட் போன்ற படிப்புகளையும் சொல்லித்தரப்படுகிறது.


எக்ஸ்கியூடிவ் செகரட்டரி என்ற ஆறு மாத படிப்பு உள்ளது இதனை படித்தால் ஒரளவு மேலே சொன்ன அனைத்து படிப்புகளையும் படித்துவிடலாம்


இது ஒவ்வொரு படிப்பும் சொல்லித்தர வௌியில் வாங்கும் கட்டணத்தை விட மிக மிக குறைவான கட்டணமே வாங்குகின்றனர் மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கும்,திருநங்ளைகளுக்கும் கட்டணம் கிடையாது.மலைவாழ் பிரிவினர் வந்து கற்றுக்கொண்டால் அவர்களுக்கு மாதமாதம் 1000 ரூபாய் உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.


பிளஸ் டூ படித்துவிட்டு ஆர்ட்ஸ் கல்லுாரியில் படிக்கப் போகும் மாணவர்கள் இங்கு படித்து சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சில் நான்கு கிரேடு வைத்திருந்தால் நுாறு சதவீதம் அரசாங்க வேலை நிச்சயம் இவர்களே இலவச வேலை வாய்ப்பு மையமும் நடத்தி மாணவர்களின் தகுதிக்கேற்ற வேலையினை வாங்கியும் தருகின்றனர்.


இப்போது பிளஸ் டூ தேர்வு எழுதி முடித்த மாணவர்களுக்கு இங்கு சொல்லித்தரும் படிப்பு பெரும் உதவியாக இருக்கும் ஆகவே உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்கு தெரிந்த பிளஸ் டூ படிக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தாலோ இவர்களை தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் தொடர்புக்கு 044-24342421,24337387.


-எல்.முருகராஜ்


murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement