Advertisement

மெய்சலிர்க்க வைத்த முப்படைகளி்ன் சாகசம்


டமால்


பயங்கரமான சத்தம்

பார்வையாளர் காலரி சட்டென அமைதியானது

சத்தம் வந்த திசையில் கடல் இருந்தது கடலுக்குள் இருந்து பனை மர உயரத்திற்கு தண்ணீர் சத்தத்துடன் எழுந்து அடங்கியது.

இதுதான் சென்னை திருவிடந்தையில் நடந்துவரும் டெபெக்ஸ்போ என்ற ராணுவ தளவாடங்கள் கண்காட்சியை முன்னிட்டு நடந்த முப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியின் முதல் நிகழ்வு.

கடலுக்குள் குண்டு .ெவெடிப்பு நிகழ்வு நடந்ததை தொடர்ந்து பல ஆயிரம் அடி உயரத்தி்ல் இருந்து பாரசூட்டில் வீரர்கள் குதித்து பறந்துவந்து சரியாக மைதானத்தில் இறங்கி பாராட்டை பெற்றனர்

அதன் பின்னர் நமது ராணுவத்தி்ல் இத்தனை விதமான ஹெலிகாப்டர்களா?என்று வியக்கும் வகையில் சிறிதும் பெரிதுமாக விதம் விதமான ஹெலிகாப்டர்கள் விண்ணில் பலவித சாகசங்களை செய்தன.இதே போல பலவித போர்விமானங்கள் பறந்துவந்து தங்களது சாகசங்களை நிகழ்த்தின.

விமனப்படையின் இந்த சாகசத்தை தொடர்ந்து கடல் படையின் சாகசம் தொடர்ந்தது தொலை துாரத்தில் இருந்த கப்பலில் இருந்து தொடர்ந்து குண்டு வெடிச்சத்தங்கள் பின்னர் கடலில் விழுந்தவரை காப்பாற்றுவது உள்ளீட்டவை நடந்தன.

பின்னர் தரைப்படையின் ராணுவ பீரங்கிகள் அணிவகுத்து வந்தன அவைகள் கடல் மண்ணில் சுற்றிச்சுழன்று சாகசம் நிகழ்த்திய போது கடல் மண் புழுதி போல எழ அது ஓரு போர்க்களம் போலவே காணப்பட்டது.

பாலம் போல செயல்படும் பீரங்கி,கண்ணி.வெடியை கண்டுபிடித்து அழிக்கும் பீரங்கி என்று பலவிதமான பீரங்கியைப்பற்றி வர்ணனையாளர் சொல்லச்சொல்ல பார்வையாளர்கள் உற்சாகத்தில் கைதட்டி ரசித்தனர்.

சாகச நிகழ்ச்சியைப் பார்த்து திரும்பிய போது இந்தியன் என்ற நினைப்பு நடையில் பெருமிதத்தை தந்தது.

-எல்.முருகராஜ்.
murugaraj@dinamalar.in


Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement