Advertisement

காட்டுத்தீ: சிக்கியவர்களை மீட்க நிர்மலா உத்தரவு

தேனி: குரங்கணி மலைப்பகுதியில் இருந்து காட்டுத்தீயில் சிக்கயவர்களை மீட்க மத்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் குரங்கினி மலைப்பகுதிக்கு சென்வர்கர் காட்டுத்தீயில் சிக்கினர். இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிர்மலா சீத்தாராமன் விமானப்படைக்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன் பேரில் கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது:
தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில் சுமார் 20-25 சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணியில் மாண்புமிகு @CMOTamilNadu ன் வேண்டுகோளை ஏற்று @IAF_MCC தேனி மாவட்ட Collector உடன் தொடர்பு கொண்டுள்ளது. மாணவர்களை மீட்டுவர எல்லா முயற்சியும் எடுக்கப்படும்.@ThanthiTV @gennowmedia @pibchennai






— Nirmala Sitharaman (@nsitharaman) March 11, 2018


2. அருகே உள்ள தேயிலை தோட்டத்திலிருந்தும் தனியார் உதவி அளிக்கின்றனர். மாவட்ட ஆட்சியாளர் டாக்டர்களையும் அனுப்பியிருந்தாக தெரிவித்தார். @IAF_MCC சூலூரிலிருந்து helicopter களை அனுப்புகிறது. @CMOTamilNadu @pibchennai @ThanthiTV @gennowmedia #குரங்கணிதீ





— Nirmala Sitharaman (@nsitharaman) March 11, 2018
3. @IAF_MCC helicopter கள் தீயணைப்பு முயற்சியிலும் தேனி மாவட்ட ஆட்சியாளரின் தேவைக்கு ஏற்ப உதவியளிக்க தயார். கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூரிலிரிந்து helicopterகள் அனுப்பிவைத்துள்ளனர். @CMOTamilNadu @pibchennai @ThanthiTV @gennowmedia #குரங்கணிதீ





— Nirmala Sitharaman (@nsitharaman) March 11, 2018

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Sutta Palam - chennai,இந்தியா

    எதுக்கெடுத்தாலும் இந்தம்மா (இந்திய வல்லரசின் ராணுவ அமைச்சர் ) குரல் கேக்குதே ...என்னய்யா நடக்குது

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    நன்றிம்மா, பாராட்டுக்கள், உங்களின் துரித நடவடிக்கைகளுக்காக. மேலும், பிரதமர் மோடிஜிக்கும். அங்கு, அதிக உயிரிழப்புக்கள் இல்லாமல் இருக்க, இறைவன் அருள் புரிய வேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement