Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

விழுந்து விழுந்து சிரிக்க துாண்டும் வகையில், தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி: சமீப காலமாக, யார் யாரோ அரசியலுக்கு வருகின்றனர். ஆனால், தமிழகத்தில், பா.ஜ.,வால் மட்டுமே, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ள, பா.ஜ., தமிழகத்திலும், ஆட்சியைப் பிடிக்கும். பா.ஜ.,வின் மக்கள் விரோத அரசை கண்டிப்பதாக, நடிகர் கமல்ஹாசன் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. அவருக்கு, பா.ஜ.,வின் வரலாறு தெரிய வாய்ப்பில்லை.

அகில இந்திய வங்கி ஊழியர் சங்க தலைவர், பாலாஜி பேச்சு: வங்கி பண மோசடி விவகாரத்தில், அதிகாரிகள், ஊழியர்கள் தவறு செய்துள்ளதாக பொய் தகவல் கூறி, வங்கிகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 20 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுக்க, வங்கியின் தலைமை தான் ஒப்புதல் அளிக்கிறது. வங்கி முறைகேட்டில் ஒரு சிலர் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்காமல், அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும் முடிவை எடுக்கக் கூடாது. வாராக்கடன் பட்டியலில் உள்ள, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கடனை வசூலித்தால், வங்கிகள் லாபத்தில் இயங்கும்.

இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர், டாக்டர் ரவிவாங்க் டேக்கர் பேச்சு: ஜனநாயக முறையில் செயல்பட்டு வரும், இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, மருத்துவர் அல்லாத, 80 சதவீத உறுப்பினர்கள் உள்ள அமைப்பை கொண்டு வர, மத்திய அரசு முற்பட்டுள்ளது. இதற்கான புதிய மசோதாவையும் தயாரித்துள்ளது. ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி படிப்பை முடித்தவர்களும், குறுகிய கால பயிற்சிக்குப் பின் மருத்துவராக பணியாற்றலாம்; மருத்துவ கல்விக் கட்டணத்தை கல்லுாரிகளே முடிவு செய்யலாம் என்பது போன்ற, மக்களுக்கும், மருத்துவ துறைக்கும் எதிரான கருத்துக்களும் அதில் உள்ளன. இதனால், மருத்துவ சேவை முடங்கும்.

'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தடையா இருக்குற, கர்நாடகா காங்கிரஸ் அரசுக்கு, ராகுல் வாயிலாக புத்திமதி சொல்ல முயற்சிக்கலாமே' என, யோசனை கூற தோன்றும் வகையில், புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி பேட்டி: பிரதமர் மோடி, புதுச்சேரி வந்த போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி, வலியுறுத்தினோம். இதுவரை, பிரதமரிடம் இருந்து பதில் இல்லை. மத்திய அரசு, உடனடியாக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • murali - Chennai,இந்தியா

    நாரயணசாமி ஒரு டுமுக் பார்ட்டி. முதல்வர் பதவிக்கு தன் கட்சி M L A பதவியை ராஜினாமா செய்ய வைத்து, ரங்கசாமி முதல்வர் ஆகிவிட்டார் என்ற காண்டில் தான் முதல்வர் ஆனார்

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    நாராயனசாமி பேசுவது வெறும் அரசியல். அப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவ்வளவு அவசியம் என்றால் ராகுலை விட்டு சித்தராமையாவிடம் பேசி மேலாண்மைவாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லட்டுமே?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement