Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'வேறொரு சிலைன்னு, உங்க மனசுல ஏதோ படுதே... அது யாருடைய சிலைங்க...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், காங்., தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பேட்டி:'திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், தமிழகத்தில், ஈ.வெ.ரா., சிலை உடைக்கப்படும்' என, பா.ஜ., தேசிய நிர்வாகி ராஜா கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். இன்று, ஈ.வெ.ரா., சிலை என்று கூறுபவர், நாளை வேறொருவரின் சிலை உடைக்கப்படும் என்பார். இதுகுறித்து எல்லாம், அ.தி.மு.க,வினர் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். ஏனெனில், பா.ஜ.,வை எதிர்க்கும் தைரியம், அ.தி.மு.க.,வுக்கு இல்லை.

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேச்சு: இதற்கு முன், தமிழகம் எப்படி இருந்தது என, யோசித்து பாருங்கள்... எத்தனை தலைவர்கள் இருந்தனர்! ஒரு தலைவர் போய்விட்டால், ஆளில்லை என, சிதறி ஓடும் கூட்டம் இருந்ததில்லை. முன் இருந்தது போல், ஒரு தலைவர் உருவாக்கப்பட்டால், யார் போனாலும், வீழ்ந்தாலும், தமிழகம் எழுந்தே தீரும். அதற்கு, தொண்டு செய்ய தெரிந்த தலைவன் உருவாக வேண்டும்.

'மிச்ச சொச்ச காலத்துக்கும் அரசியல் செய்தாகணுமே...' என்ற கவலையுடன்,ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேச்சு: 'திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல், தமிழகத்தில், ஈ.வெ.ரா., சிலை விரைவில் அகற்றப்படும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, எச்.ராஜா தெரிவித்துள்ளார். தைரியம் இருந்தால், அவர் சிலை அருகே வரட்டும். மத்திய ராணுவமும், தமிழகத்தில் அவர்களின் ஆதரவு போலீஸ் வந்தாலும், நானும், என் தொண்டர்களும் சேர்ந்து, அவரது கை, கால்களை உடைத்து, துாள் துாளாக்குவோம்.

ஆர்.கே.நகர், எம்.எல்.ஏ., தினகரன் பேட்டி: ஈ.வெ.ரா., சிலையை இடிப்போம் என, எச்.ராஜா கூறியிருப்பதை, யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது; இது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.,வினர், தமிழகத்தில் கலவரப்படுத்தி கட்சியை வளர்க்கப் பார்க்கின்றனர். ராஜாவுக்கு, நாக்கில் சனி உட்கார்ந்து இருக்கிறது.

தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் வீரமணி பேச்சு: அ.தி.மு.க.,வையும், அதன் கொடியையும் கைப்பற்ற, சசிகலாவும், தினகரனும் முயற்சிக்கின்றனர். இந்தக் கட்சியில், கிளைச் செயலர்கள் செய்த தியாகத்தைக் கூட, இவர்கள் இருவரும் செய்ததில்லை. கொல்லைப்புறமாக வந்து, ஆட்சியை பிடிக்க பார்த்தால், அது நடக்காது. ஆட்சியை கலைக்கவும், கட்சியை பிடிக்கவும், எந்த கொம்பனாலும் முடியாது.

தி.மு.க., முதன்மை செயலர் துரைமுருகன் பேச்சு: தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் நகைகளை அணிந்து செல்ல முடியாதபடி, செயின் பறிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. மாநிலத்தில் நல்ல திட்டங்களை கொண்டு வருவது குறித்து, ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், படாதபாடு படுகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    ராஜா பெரியார் சிலை என்று மட்டும்தான் குறிப்பிட்டார். ஆனால் அது உடைக்கப்படும் என்று அவர் கூறியதாகவும் அப்படி சிலை அருகே வந்தால் அவரது கை கால்கள் தூள் தூளாகுமென்றும் வைகோ வீரவசனம் பேசுகிறார். இப்போ யார் வன்முறைபேசுகிறார்கள்? வைரமுத்து வருத்தம் தெரிவித்துவிட்டார், அதனால் யாரும் போராட்டம் நடத்தக்கூடாது என்று சொன்னவர்கள், ராஜா வருத்தம் தெரிவித்தபின்பும் இப்படி பேசுவது ஏதோ ஒரு நிகழ்வுக்காக காத்திருந்ததுபோல தெரிகிறதே?

  • skv - Bangalore,இந்தியா

    குஷ்பு நீ கச்சிக்குக்கச்சி மாறி இப்போ சோனியாக்கு மணி அடிக்கிறீங்க , என்ன தான் நீங்கல்லாம் சொன்னாலும் அடுத்தும் பிஜேபி தான் ஆளபோவுது இது சத்தியம் ராஜபோல சிலதுகளின் நடத்தையால் பேச்சால் பிஜேபி க்கு அழிவு இல்லீங்க நல்லாட்ச்சியைப்பொறுக்கவேமுடியாதுதான் ராகுலும் இதர குப்பைகளும் கூத்து காட்டுறீங்க முதல்ல நீ இந்த ஹெல்த்தை பார்த்துக்கம்மா , ஹாப்பி மகளிர்தின வாழ்த்துக்கள் சிஸ்டர்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement