Advertisement

பா.ஜ., வெற்றிஏற்று தான் ஆகணும்!

வட கிழக்கு மாநிலங்கள், மொத்தம் எட்டு உள்ளன. ஏற்கனவே அசாமில் ஆட்சியைக் கைப்பற்றிய, பா.ஜ., இப்போது தொடர்ந்து, 25 ஆண்டு களாக மார்க்சிஸ்ட் ஆட்சி நடந்த திரிபுராவை வென்றிருப்பது, அரசியல் தத்துவ அடிப்படையில் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள மொத்த சட்டசபைத் தொகுதிகள், 180 மட்டுமே. தலா, 60 சட்டபைத் தொகுதிகள் கொண்ட இவற்றில் நாகாலாந்து, மேகலாயாவில் பழங்குடியினர் உள்ளனர். எளிதாக ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். வென்றவர்களில் பலர், கோடீஸ்வரர்கள் என்பது, சராசரியான புகார் ஆகும். வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மட்டுமே, பிரமாண்டமாக இருந்த காலம் மாறிவிட்டது.
திரிபுரா தவிர, மற்ற இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், மற்றும், பா.ஜ., ஆகிய இருகட்சிகளுமே, கிறிஸ்தவ மதத்தின் வழிபாட்டுக் கேந்திரமான ஜெருசலம் செல்ல சலுகை தருவதாக, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன. ஆனால், வளர்ச்சி என்ற அடிப்படையில், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், பா.ஜ., ஆட்சி அமைந்த பின், சாலை வளர்ச்சி, விவசாயத்திற்கு முன்னுரிமை போன்ற பலவிஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன.தேர்தல் நடந்த, இம்மூன்று மாநிலங்களிலும் பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்திருக்கின்றனர்.
மேகாலயாவில் உள்ள திமாபூரில், சர்ச் தலைவர்கள் வழக்கமாக தேர்தலில் முக்கிய பங்காற்றுவது உண்டு. நாகாலாந்தில் உள்ள, 'பாப்டிஸ்ட் சர்ச்' என்ற அமைப்பின் கீழ் 1,500 சர்ச்சுகள் உள்ளன. ராஜிவ் காலத்திலும், அதற்குப் பின்னும், இவர்களின் முக்கியத்துவம், தேர்தல் நேரத்தில் பிரதிபலிக்கும்.ஆர்.எஸ்.எஸ்., கொள்கைப் பின்னணியை உடைய, பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதா என்பதை எண்ணிப்பார்க்க மக்களை ெவளிப்படையாக, இந்த தடவை கேட்டுக் கொண்டனர். தேர்தல் சமயத்தில் மெஜாரிட்டி மதத்தை சேர்ந்த தலைமை, யோசனை கூறுவது, காலம் காலமாக அங்குள்ள பழக்கம். இது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும்.திரிபுராவைப் பொறுத்த அளவில், 35 இடங்களில், பா.ஜ., வெற்றி, அதன் கூட்டணியான திரிபுரா மக்கள் முன்னணி எட்டு இடங்களில் வெற்றி பெற்றது புதுமை. அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்காரை பதவியில் இருந்து அகற்றுவது சிரமம் என்று கூறியது போக, அங்குள்ள மக்கள், மோடி தலைமையை ஏற்றது பெரிய மாற்றம்.
ஆதிவாசி மக்கள் ஆதரவு, பா.ஜ.,வை அமோக வெற்றி பெற உதவியது. தனக்கு கவுரவமான அமைச்சர் பதவிகளை, திரிபுரா மக்கள் முன்னணி எதிர்பார்க்கிறது. இங்கு, பா.ஜ., முதல்வராக வரப்போகும், பிப்ல தாஸ் வயதில் இளைஞர். ஆதிவாசிகள் நலன் காக்க முயலுபவர். மதத்தை, அரசியலுடன் கலக்க விரும்பவில்லை என்று அவர் கூறியிருப்பது, கவனிக்கத்தக்கது. அதை, ஆர்.எஸ்.எஸ்., தலைமையும் ெதளிவுபடுத்திஇருக்கிறது.இதுவரை திரிபுராவைப் பற்றி அதிகம் பேசாத மீடியாக்கள், அங்கே, 'கம்யூனிஸ்ட் கேடர் ராஜ்' இருந்ததையும், மே.வங்கத்தில் திரிணமுல் ஆட்சி ஏற்பட்டது போல், வளர்ச்சியை மக்கள் எதிர்பார்த்ததாகவும் மதிப்பீடு செய்திருக்கிறது.
மொத்தத்தில் கம்யூனிசம் கரைந்ததின் அடையாளமே, இத்தோல்வி.'பணபலம், ஆள்பலத்தால், பா.ஜ., பெற்ற வெற்றி' என்ற அடிப்படையில் திரிபுராவைக் கருதினால், இத்தனை ஆண்டுகள் எப்படி, 'நல' ஆட்சி நடந்திருக்கிறது என்ற கேள்வி எழும். பா.ஜ.,வின் வலதுசாரிக் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மேகாலயாவில் மாநிலக்கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு, கொன்ராட் சங்மா முதல்வராக வரப்போகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த சோதனை.நாகாலாந்தில் மாநிலக் கட்சியான மக்கள் முற்போக்கு கூட்டணியுடன், பா.ஜ., ஆட்சி ஜிலாயனிங் முதல்வர் தலைமையில் நடக்கும்.
இம்மாநிலங்களில், பா.ஜ., பெற்ற வெற்றி, தேசிய அளவில், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலைப் பற்றி, மம்தா உட்பட சில மாநிலக்கட்சி முதல்வர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.காங்கிரஸ் கட்சியின் தலைவர், ராகுல் தலைமையை, இவர்கள் ஏற்பதாக அறிவிக்கவில்லை. இத்தேர்தல் குறித்து காங்கிரஸ் கருதுவது என்ன என்பதை, ராகுல் ெவளிநாட்டுப் பயணம் முடிந்த பின் தெரிவிக்கும் கருத்து, நிச்சயம், 'எதிர்க்கட்சிகள் கூட்டணி' பற்றிய ஒரு விவாதத்தை இனி ஏற்படுத்தலாம்.
அபார வெற்றி பெற்று, நாடு முழுவதும் பரந்த, பா.ஜ., முக்கிய சக்தியாக மாறியதை, இப்போது ஏற்பதைத் தவிர, மற்ற கட்சிகளுக்கு வழி கிடையாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement