Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், கர்நாடகாவில் உள்ள, பா.ஜ., - காங்., மறைமுக கூட்டாக, தொடர் துரோகத்தை விவசாயிகளுக்கு செய்கிறது. மத்திய அரசு, குறிப்பாக பிரதமர், நடுநிலையோடு செயல்பட்டு, தமிழகத்திற்கு நன்மை கிடைக்கக் கூடிய வகையில், நடந்து கொள்ள வேண்டும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி: நான், 13 ஆண்டுகளாக, சென்னையில் உள்ள மருத்துவமனையில், உடல் பரிசோதனை செய்து வருகிறேன்; இப்போதும் அதற்காகத் தான் சென்றேன். எனக்கு, எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், எனக்கு மோசமான நோய் இருப்பதாக, தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளனர். நான் விரைவில் சாக வேண்டும் என, விரும்பும் விஷமிகளால் தான், இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒருவரின் மரணம், இன்னொருவரின் விருப்பப்படி நடக்காது.

தான் ஏன் தோற்றோம் என்பதற்கு கணக்கு சொல்லும் வகையில், திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் பேட்டி: திரிபுரா சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் பண பலத்தையும், ஊடகங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட தவறான பிரசாரத்தையும் முறியடிப்பதற்கு, இடதுசாரி தொண்டர்கள் முடிந்த அளவுக்குப் போராடினர். ஆனால், எதிர்பாராத விதமாக தேர்தல் முடிவுகள், பா.ஜ., கூட்டணிக்கு சாதகமாக அமைந்து விட்டன. முந்தைய தேர்தலில், இடதுசாரி முன்னணிக்கு ஓட்டளித்தவர்களில் ஒரு பகுதியினர் தற்போது, பா.ஜ., கூட்டணிக்கு ஓட்டளித்துள்ளனர். இது எப்படி நிகழ்ந்தது என்பதை, மறு ஆய்வு செய்வோம்.

அ.தி.மு.க., - எம்.பி., மைத்ரேயன் பேட்டி: 'பார்லிமென்ட் உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும்; அதற்கான நிர்ப்பந்தங்கள், மத்திய அரசுக்கு ஏற்படும்' என்றால், ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளோம். பார்லிமென்டினுள் மத்த கட்சியுடன் பேசி, மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொண்டு வருவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து, பிரதமர் தெளிவான விளக்கம் கொடுக்கவும், நிர்ப்பந்தம் கொடுப்போம்.
பிரச்னைக்கான தீர்வை கையில் வைத்துக் கொண்டு, 'அதை யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்களே...' என, விசனப்படுபவர் போல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக விவாதிக்க, நான்கு மாநிலங்களின் பிரதிநிதிகளை, மத்திய அரசு அழைத்துள்ளது. இப்படி பேச்சுக்கு அழைப்பது, காலம் தாழ்த்துவதற்கான தந்திரமாகவே தெரிகிறது. பிரதமரிடமிருந்து இதுதொடர்பான வாக்குறுதி எதுவும் வராதபோது, இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது, மத்திய அரசின் தந்திரத்திற்கு பலியாவதாகவே பொருள்படும். பா.ஜ., அரசின் சூழ்ச்சி வலையில், தமிழக அரசு சிக்கிவிடக் கூடாது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    தனக்கு விருப்பமென்றால் விஷத்தைக்கூட நல்லது என்று சொல்வார் திருமா. ஆட்சியில் இருந்த போது காவிரி பிரச்சினையில் துரும்பைக்கூட கிள்ளிப்போடாத திமுக இவருக்கு தோழமை கட்சி. கர்நாடக ஆளும்கட்சியாக இருந்து காவிரியில் தண்ணீர் விடமாட்டோம் என்று முரண்டுபிடிக்கும் காங்கிரஸ் இவருக்கு தோழமை கட்சி. தமிழர் நலன் என்று பேசும் இவர்தான் எம் பி யாக இருந்தபோது தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுடன் விருந்து சாப்பிட்டவர். அவரது கட்சியில் இருக்கும் படித்தவர்களே இவரது அரசியலை பார்த்து தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement