Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'தி.மு.க., தலைவர் குடும்பம், ஆட்சியை விட்டு இறங்கி, ஆறேழு வருஷமாகிடுச்சு... இன்னும், அவங்களையே திட்டி குமிச்சு, எத்தனை காலம் தான் வண்டி ஓட்டப் போறீங்களோ...' என, கேட்க தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயலர், ராஜா பேட்டி: காவிரி விவகாரத்தில், தி.மு.க., தலைவரின் குடும்பம் செய்த துரோகம் ஏராளம். இதற்காக அவர்கள், மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசு நிச்சயம், காவிரி விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கும்.

ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ பேட்டி: காவிரி பிரச்னையில், தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் இணைந்ததால், ஆரோக்கியமான அரசியல் துவங்கி இருக்கிறது. மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக, தமிழக குழுவை, பிரதமர் சந்திக்க மறுத்தது உண்மை என, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறிய நிலையில், அதை மறுத்து பேட்டியளிக்கும் அமைச்சர், ஜெயகுமார், தன் பண்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

'கம்யூ.,க்களின் கோட்டையான மேற்கு வங்கம், திரிபுரா எல்லாம், வரிசையா காலியாகிட்டே வருது... அந்த விரக்தியில, மூத்த தலைவரான நீங்களே, இப்படி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ கதையா பேசலாமா' என, கேட்க தோன்றும் வகையில், இந்திய, கம்யூ., தேசிய குழு உறுப்பினர், நல்ல கண்ணு பேட்டி: வடகிழக்கு மாநிலங்களில், தனி நாடு கோரும் பிரிவினைவாத சக்திகளுடன் கைகோர்த்து, பண

பலம், அதிகார துஷ்பிரயோகத்தால் குறுக்கு வழியில், பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது.தமிழக பால்வளத் துறை அமைச்சர், ராஜேந்திர பாலாஜி பேட்டி: ரஜினியும், கமலும் மறைமுகமாகவோ, நேரடியாகவோ கூட்டணி வைத்தாலும், இரண்டுமே உருப்படாது. அ.தி.மு.க.,வை அழிக்க நினைக்கும் கமலின் கட்சியை, கருவிலேயே அழிக்கத் தான் நாங்கள் பார்ப்போம்.

'ஆளுங்கட்சிக்கு ஜால்ரா போடுவது மட்டும் தான், உங்க கட்சியின் கொள்கையா' என, கேட்க தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமார் அறிக்கை: 'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக, எம்.பி.,க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கூறியிருப்பதில், அரசியல் நோக்கம் உள்ளதாக தெரிகிறது. அவர் உண்மையாகவே, அரசியல் ஆதாரமின்றி, தமிழக நலனுக்காக மட்டுமே இக்கருத்தைச் சொல்லியிருந்தால், தற்சமயம் பதவியில் உள்ள, தி.மு.க., - எம்.பி.,க்கள் நான்கு பேரையும், ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும்.


'தனிக் கடை போட்டா, கல்லா பெட்டியில சல்லிக்காசு கூட தேறாதுங்கிறதை நல்லாவே தெரிஞ்சு வச்சிருக்கீங்களே...' என, கூற தோன்றும் வகையில், தினகரன் ஆதரவாளர், புகழேந்தி பேட்டி: தினகரன் தனிக்கட்சி துவங்குவதில், எனக்கு நாட்டம் இல்லை. அ.தி.மு.க., எங்களுடைய கட்சி; இரட்டை இலை எங்களுடைய சின்னம். கால சூழ்நிலையால் மட்டுமே, இந்த ஆட்சியாளர்கள் பதவியில் அமர்ந்துள்ளனர். எனவே, இது எங்களுடைய கட்சி. தினகரனை, அ.தி.மு.க.,வில் முதல்வராக்க விரும்புகிறோம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement