Advertisement

தட்சின்சித்ராவில் ஒரு நாள் ...

தட்சின்சித்ராவில் ஒரு நாள் ...


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது தட்சின்சித்ரா கலைக்கூடம்.
தமிழகம் ஆந்திரா கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் உள்ள பராம்பரிய வீடுகளைப் போலவே இங்கு அமைத்திருக்கிறார்கள்.


சில வீடுகளை அங்கு இருந்து விலை கொடுத்து வாங்கி பிரித்து எடுத்து வந்து இங்கே கட்டியும் இருக்கிறார்கள்

அபார்ட்மெண்ட் கலாச்சாரம் பெருகிவரும் சூழ்நிலையில் அன்றைய தினம் எப்படி நம் மக்கள் ஒரு வீட்டில் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்தார்கள் என்ற இன்றைய இளைஞர்கள் ஐயப்பாடுகளுக்கு இந்த வீடுகள் பதில் சொல்லும்
மேலும் இந்த நிறுவனத்தின் தலைவர் டெபோரா தியாகராசன் மண்ணின் மரபு சார்ந்த கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புத்துயிர் கொடுப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ளார்.வருடம் முழுவதும் பராம்பரிய நிகழ்வுகள் இங்கு நடந்துகொண்டேதான் இருக்கும்.


இவர் தொகுத்து எழுதிய மண்ணின் மரபு என்ற ஆங்கில நுால் வெளியீட்டு விழாவினை முன்னிட்டு இங்கு நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்வுகள் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தான ஒன்று.
ஒதுவார்கள் வரலாறு,நாதஸ்வரத்தின் கதை,தெருக்கூத்து கலை என்பது போன்ற பல விஷயங்கள் பற்றி விரிவாக பேசினர், விக்கு விநாயகம் தன் மகன் உமா சங்கருடன் கலந்து கொண்டு கடம் பற்றி பேசியதுடன் தனது கடம் வாசிப்பால் அவையை கலகலப்பாக்கினார்.



எங்கோ ஒரு சிலர் இது போல நம் மண்ணின் மரபுகளுக்காக சத்தம் இல்லாமல் பாடுபட்டுக்கொண்டுதான் இருக்ககின்றனர்.அவர்களுக்கு மனமார வாழ்த்து சொல்வோம்

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

    வளர்க தங்களின் தொண்டு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement