Advertisement

முக்கிய தருணம்!

ஸ்ரீதேவி மரணம், அதிகமாக மூன்று நாள் பேசப்பட்டது. அவர் தங்கியிருந்த நட்சத்திரஓட்டலில், 'பாத் டப்' என்ற குளியல் தொட்டியில் நினைவு இழந்து விழுந்ததால், பரிதாப மரணம் நேர்ந்திருக்கிறது. 54 வயது என்பது, மரணத்தை எதிர் நோக்கும் வயதல்ல. அதில் சில விதி விலக்கு வரலாம் என்பதைத் தாண்டி, புதிய காரணங்களுடன் இவர் மரணம் நடந்திருக்கிறது.மேலைநாட்டு சிறந்த இசைப்பாடகியர் சிலர், போதைப் பொருள் அல்லது மது அருந்தி, குளியல் தொட்டியில் இறந்தது உண்டு. இம்மாதிரி குளியல் தொட்டி, 1.5 அடி ஆழம் மட்டுமே இருந்தாலும், வண்ண மார்பிள் சுற்றி இருப்பது, தலைகுப்புற அல்லது தலைகீழாக விழுவது ஆகியவை, சாவுக்கு காரணமாகின்றன. அவரது திடீர் மரணம், மீடியாவில் வலம் வந்தது இயல்பானதே.சிறுவயதில், தனது அதிக வருமானத்தை காக்க வேண்டிய கட்டாயம், நெருங்கியவர்கள் அவரை ஏமாற்றிய விதம் ஆகியவை, மனரீதியாக இரட்டை வேடமான வாழ்வை நிரந்தரமாக்கி விட்டது.சினிமா உலகில், ஆண்களை விட பெண்கள் மனரீதியான தொடர் சம்பவங்களை சந்தித்து, அதில் மூழ்கிடும் போது, மது அல்லது போதை அல்லது மருந்துகள் தவிர, வேறு நெருங்கிய நட்பு கிடையாது. அத்துடன், உடலைப் பராமரிக்கும் போது, அதைப் புற அழகுடன் மிளிரச் செய்ய வேண்டிய தொடர் கட்டாயமும் ஏற்படுகிறது. இது அவர்களுடைய புகழைக் காக்க முக்கிய காரணமானதால், துபாய் போலீசார் கடைசி கட்டத்தில், இவர் சாவு குறித்து, கணவர் போனி கபூரிடம் விசாரித்திருக்கின்றனர் போலும். திரை உலகம், மனதைக் கவரும் புதிய இசை உலகம், வண்ண விளம்பரங்களில் பங்கேற்பு போன்ற கவர்ச்சியான தொழில்களில் உள்ள இளம் பெண்கள் வாழ்வில், எப்போதும் துயரம் அல்லது மனப்போராட்டம் இருக்கிறது என்பது, இதனால் புலனாகிறது.படித்த இளம் பெண்கள் ஆராய வேண்டிய மிக முக்கியமான தருணம் இது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement