Load Image
Advertisement

டீ கடை பெஞ்ச்

ஒரு வாரத்தில் ரூ.1.50 லட்சம் அள்ளிய இன்ஸ்பெக்டர்!


''லைசன்ஸ் வச்சிருக்கிறவங்களுக்கு தான் முன்னுரிமையாம் வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.''அம்மா டூ-வீலர் திட்டத்துலயா பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

''ஆமாம்... இன்னைக்கு தான்
திட்டத்தை துவங்குதாவ... இதுக்கு விண்ணப்பிச்ச பெண்கள்ல, எல்.எல்.ஆர்., வாங்குனவங்க தான் அதிகம்...''முறையா லைசன்ஸ் வாங்குனவங்களே, வண்டி ஓட்டி விபத்துல சிக்கிடுதாவ... இதுல, எல்.எல்.ஆர்., வச்சிருக்
கிறவங்க விபத்துல சிக்குனா, அதையும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் பண்ணுமுல்லா...''அதனால, முறையா லைசன்ஸ் வச்சிருக்கிறவங்களுக்கு முதல்ல குடுத்துட்டு, அடுத்து, எல்.எல்.ஆருக்கு டூ-வீலர் குடுங்கன்னு அதிகாரிகளுக்கு
வாய்மொழி உத்தரவு போட்டிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.''இன்னைக்கு தான, அ.தி.மு.க.,வின்,
'நமது அம்மா'
நாளிதழ் வெளியீட்டு விழாவும் நடக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...''ஜெயகோவிந்தன்னு ஒருத்தர், 'நமது புரட்சித்தலைவி அம்மா'ன்னு ஒரு பத்திரிகையை நடத்திட்டு வந்தார்... அவர்கிட்ட பேசி, அந்த பத்திரிகையை தான், 'நமது அம்மா'ன்னு மாத்தியிருக்காங்க பா...
''கடைசியில தான், அந்த பத்திரிகையை, ஆர்.என்.ஐ., என்ற, 'ரிஜிஸ்டிரார் ஆப் நியூஸ் பேப்பர்ஸ் ஆப் இந்தியா' - இந்திய பத்திரிகைகள் பதிவகம் என்ற அமைப்புல, மாத இதழா பதிவு
பண்ணியிருக்கிறதா, ஜெயகோவிந்தன் சொல்லியிருக்கார்...''இதைக் கேட்டு, ஆளும் தரப்புல, 'ஷாக்' ஆகிட்டாங்க... அதனால தான், திட்டமிட்டபடி, பொங்கல் அன்னைக்கு பத்திரிகையை
வெளியிட முடியாம போயிடுச்சு பா...''அதை, நாளிதழா மாத்த, ஆர்.என்.ஐ.,ல விண்ணப்பிச்சு, இப்ப தான் அனுமதி கிடைச்சிருக்கு... இதுவும், தமிழ், ஆங்கிலத்துல வெளிவரும்னு பதிவு பண்ணியிருக்காங்க...
''அதாவது, நாளிதழ்ல, ஒரு செய்தியையாவது ஆங்கிலத்துல வெளியிட திட்டம் போட்டுட்டு இருக்காங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''எஸ்.பி., வரதுக்குள்ள, 'லம்பா' தேத்திடணும்னு களம் இறங்கிட்டார் ஓய்...'' என்றார் குப்பண்ணா.''எந்த ஊருல, யாருங்க...'' எனக்
கேட்டார் அந்தோணிசாமி.''சென்னைக்கு பக்கத்துல இருக்குற மாவட்டத்தின், எஸ்.பி., ஒரு மாச பயிற்சிக்காக, பக்கத்து மாநிலத்திற்கு போயிட்டார்... அவர் போனதும், மணல் கொள்ளை சுறுசுறுப்பாயிடுத்து ஓய்...
''குறிப்பா, கூவம், கொற்றலை ஆறுகள்ல மணல் கொள்ளையர்கள், ராப்பகலா மணல் அள்ளிண்டு போறா... இதுக்கு கைமாறா, சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு, ஒரு வாரத்துல மட்டும், ஒன்றரை
லட்சம் ரூபாய் கைமாறிடுத்து ஓய்...''எஸ்.பி., வர, இன்னும், மூணு வாரம் இருக்கறதால,
பெரும் தொகையை தேத்திடணும்னு, சர்க்கிள், கால்ல சக்கரம் கட்டாத குறையா ஓடிண்டு இருக்கார் ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.எதிரில் வந்தவரை நிறுத்திய அந்தோணிசாமி, ''பாலு... திருவள்ளூர்ல இருந்து எப்ப வந்தீங்க...'' என, தனியே அழைத்துச் சென்று ரகசியம் பேச, நண்பர்கள் அரட்டை தொடர்ந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement