Load Image
Advertisement

டீ கடை பெஞ்ச்

விஜயதாரணி விவகாரத்தில், 'அப்செட்' ஆன அரசர்!


''முதல்வர் உத்தரவை மீறி, வசூல் வேட்டை நடத்துதாவ வே...'' என, டீயை உறிஞ்சியபடியே, வாயை திறந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாரைச் சொல்றீங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தமிழகம் முழுக்க, கூட்டுறவு துறை சார்புல இயங்குற ரேஷன் கடைகளுக்கு, விற்பனையாளர், எடையாளர் வேலைக்கு ஆள் எடுக்காவ... இதுக்காக, மாவட்ட வாரியா விண்ணப்பம் வாங்கி, நேர்முக தேர்வும் நடத்தி முடிச்சிட்டாவ வே...

''உள்ளாட்சி தேர்தல் எப்பவும் வரலாம்கறதால, 'கட்சிக்காரங்களை உற்சாகப்படுத்துற விதமா, இந்த பணியிடங்களை, ஆளுங்கட்சி தொண்டர்கள், அவர்களின் வாரிசுகளுக்கு போட்டு குடுங்க'ன்னு முதல்வர் சொல்லி
இருக்காரு வே...''ஆனா, அதை காதுல போட்டுக்காம, ஒரு பணியிடத்துக்கு, அஞ்சு லட்சம் ரூபாய் வரை பேரம் பேசிட்டு இருக்காவ... இதனால, துறையின் அமைச்சர் மேல, மாநிலம் முழுக்கவே கட்சிக்காரங்க
அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
''வேற எங்கல்லாம் மோசடி நடந்திருக்குன்னு விசாரிக்கிறாங்க...'' என, அடுத்த விஷயத்திற்கு வந்தார் அந்தோணிசாமி.
''நாட்டுல தினமும் ஒரு மோசடி நடந்துட்டு இருக்கு... நீங்க எதைச் சொல்றீங்க பா...'' என கேட்டார் அன்வர்பாய்.
''போலீஸ் வீட்டு வசதி கழகத்தின், மதுரை மண்டலம் சார்புல, தென்மாவட்டங்கள்ல, போலீஸ், தீயணைப்பு, சிறைத் துறைக்கு கட்டடங்கள் கட்டுறாங்க... இதுக்கு, 'ஹாலோ பிளாக்'
கற்களை பயன்படுத்துறாங்க...''இந்த கற்களை, மதுரை சிறையில, கைதிகளே தயாரிக்குறாங்க... வீட்டு வசதி கழக உதவி பொறியாளர் ஒருத்தர், இந்த கற்களை வெளியில வாங்குனதா கணக்கு காட்டி, மோசடி பண்ணிட்டதா புகார்கள் வந்துச்சு... அவரை, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க...
''இந்த மோசடியில, வீட்டு வசதி கழகத்துல வேலை பார்க்குற
வேற யாருக்கும் தொடர்பு இருக்கான்னு விசாரிக்க, ஒரு குழுவை நியமிச்சிருக்காங்க... அந்த குழு, விசாரணையில இறங்கிடுச்சுங்க...'' என, முடித்தார்
அந்தோணிசாமி.''திருநாவுக்கரசர் பயங்கர, 'அப்செட்'ல இருக்கார் ஓய்...'' என, கடைசி விஷயத்திற்கு வந்தார் குப்பண்ணா.''அவருக்கு என்ன வே பிரச்னை...'' என்றார் அண்ணாச்சி.
''சட்டசபையில, ஜெ., படம் திறக்கப்பட்டதை வரவேற்று, காங்., - எம்.எல்.ஏ., விஜயதாரணி கருத்து சொன்னாங்களோல்லியோ... இதுக்கு,
மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவிச்சிருந்தார் ஓய்...''தாரணிக்கு
எதிரா, டில்லி மேலிடத்துக்கு புகாரும்
அனுப்புனார்... ஆனா, மேலிட விசாரணையில, காங்., - எம்.எல்.ஏ.,க்கள்ல, அஞ்சு பேர், விஜயதாரணிக்கு ஆதரவு தெரிவிச்சிருக்கா... இதை கேள்விப்பட்டு, அரசர், 'அப்செட்' ஆகிட்டார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
வேறு சில நண்பர்களும் வர, 'டீக்கடை பெஞ்சில்' வெளியிடாத, அரட்டை தொடர்ந்தது.



வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement