Advertisement

காலம் தான் பதில் கூறும்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் உடனடியாக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை; ஆனால், புதிய புதிய கட்சிகள் வரப்போகின்றன.சினிமாவின் பின்புலத் தாக்கம் இல்லாத யாரும், கட்சியை மிகப் பெரியதாக நடத்த முடியாது. சினிமாத்துறை முன்னணியினர் தான், அன்று, ஐந்து கோடி தமிழர்களை ஆட்டிப் படைத்து, அதன் பின்னணியில் உள்ளவர்கள் மட்டுமே கோலோச்சினர் என்ற வாதம், திரும்பவும் எழுந்திருக்கிறது. இன்று தமிழகம், எட்டு கோடி பேரை கொண்டது; அதில், அதிக அளவு பெண்கள் ஓட்டளிப்பது வழக்கமாகிறது. கல்வியில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்தாலும், படித்த தலைவர்கள் நிர்வாகத்துக்கு ஏற்றவர்களா என்பதை முடிவு செய்யும் காலம் வரவில்லை.இச்சூழ்நிலையில் முன்னணி நடிகர் ரஜினி, தன் அரசியல் பிரவேசத்திற்கு உரிய நடவடிக்கைகளை தீவிரமாக்கும் போது, அவருடன் இணைந்து நடித்து, அதேசமயம், 'சினிமா மரபணு' கொண்டிருந்த கமல், அரசியல் கட்சித் தலைவராகிறார்.கேரள முதல்வர் பினராயி விஜயன், மே.வங்கத்தின் முதல்வர் திரிணமுல் மம்தா, திடீரென அரசியலில் கட்சி துவங்கி, தேர்தலில் அபார வெற்றியுடன், பல்வேறு ஊழல் புகார்கள், நிர்வாகக் குளறுபடிகளுடன் காலத்தைக் கழிக்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆகியோரைச் சந்தித்திருக்கிறார். அத்துடன், கமல் - ரஜினி சந்திப்பு, இருவரும் தனித்தனியான கோட்பாடு கொண்டவர்கள் என்பதை ெவளிச்சமாக்கி உள்ளது. மூத்த நடிகர் விஜயகாந்த் உடனான சந்திப்பு, மக்கள் ஆதரவுடன், எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்தால், அதை நழுவ விடாமல், கட்சியைக் காக்க வழி காண உதவும் என்ற கோணமாக இருக்கலாம். அத்துடன் ஏன், அவருடன் வாழ்ந்து, பின் தனியாகச் சென்ற கவுதமி போன்ற அரசியல் அறிந்த பல பெண் தலைவர்களை, இனி அவர் சந்திக்கலாம். தமிழகத்தில் இன்று ஆளும், அ.தி.மு.க., மெஜாரிட்டியை சட்டசபையில் கொண்டிருக்கவில்லை. துணை முதல்வர், பன்னீர்செல்வம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அபார விசுவாசி. அதனால் தான் தனக்கு சசிகலா கொடுத்த நெருக்கடிகளை கூறி, மற்றவர்கள் எனில், 'தற்கொலை செய்து கொள்வர்' என்றதுடன், முதல்வர் பதவி கிடைக்காததை, 'நாம் எதைக் கொண்டு வந்தோம்?' என்று பதில் அளித்தது, சிந்திக்கத்தக்கது.இனி அதிக அளவு, அ.தி.மு.க., கட்சியின் முன்னணித் தலைவர்கள், பல விஷயங்களை இதே பாணியில் ெவளிப்படுத்தலாம். ஆனால், 'தி.மு.க.,வில் தேக்கம் வந்து விட்டது' என்ற, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் கராத்தின் கருத்து, தி.மு.க.,வின் எரிச்சலை அதிகரிக்கும். நாடு முழுவதும் அந்தக்கால பார்வர்டு பிளாக், சுதந்திர கட்சி போல, மார்க்சிஸ்ட் கட்சி வரலாறுகளில் மட்டும் இடம் பெறும் காலத்தை நோக்கிப் பயணிக்கையில், கட்சியில், கராத் - யெச்சூரி என்ற இரு அணிகள், கட்சியை முடக்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் அவர்கள் பங்கு என்ன இருக்கிறது... பல கட்சித் தலைவர்கள் இதை யோசிக்கலாம்.இப்படிப்பட்ட சூழ்நிலையில், தன் சொந்த ஊரான பரமக்குடியை, சினிமாத்துறையில் கொடிக்கட்டிப் பறந்த காலத்தில் கவனிக்காத கமல், இன்று அப்துல் கலாம் நினைவிடமான ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை துவக்குகிறார். ராமேஸ்வரமும், காசியும் இந்த நாட்டின் பாரம்பரிய கலாசார அடையாளங்கள். பா.ஜ.,வை விட இச்செயல் அதிக, 'ஹிந்துத்வா' கருத்து கொண்டது. இந்திய அரசியல் சட்டப்படி திட சிந்தனை, ஓட்டுப்போடும் தகுதி இருக்கும் எவரும், கட்சி துவங்கலாம். அது மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற, தேர்தலில் வெற்றி பெறுவதுடன், கூட்டணியாக காலடி எடுத்து வைத்தால், அது ஆட்சியைப் பிடித்து விடலாம் என்பது, வரலாற்றில் உள்ள தகவல். தி.மு.க., ஆட்சிக்கு வர, அண்ணாதுரைக்கு பின்புலமாக மூதறிஞர் ராஜாஜியும், அழகு முகத்தைக் காட்டிய, எம்.ஜி.ஆரும் உண்டு. ஆந்திராவில், தெலுங்கு தேசம் வர, அன்றைய பிரதமர் ராஜிவ், அம்மாநிலத்தின் மூத்த, எஸ்.சி., பிரிவு முதல்வரை நிராகரித்தது காரணம். இன்று, தமிழக மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் சில லெட்டர் பேடு கட்சிகள், கமலுடன் அணி சேரலாம். இனி நடிகர் ரஜினியும், தன் உத்திகளை மாற்றலாம். தமிழகத்தில், 'திராவிட' அல்லது, 'இந்தி எதிர்ப்பு' அல்லது, 'மாநில சுயாட்சி' என்ற வார்த்தைகள், தொடர வாய்ப்பில்லை. சட்டம் - ஒழுங்கு, ஊழலற்ற நிர்வாகம், வேலைவாய்ப்பு, மத்திய அரசிடம் மாநிலத்தின் நலன்களை பெற காலக்கெடுவுடன் கூடிய செயலாக்கம் இல்லாமல், கட்சிகள் புதிதாக தோன்றி என்ன பயன் இருக்கப் போகிறது? இவற்றிற்கு காலம் தான் பதில் சொல்லும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement