Advertisement

சொல்கிறார்கள்

அறுவை சிகிச்சையின்றி சரி செய்யலாம்!

நெல்லையை சேர்ந்த ஓமியோபதி மருத்துவர், ஜி.ராதாகிருஷ்ணன்: ஓமியோபதியில், நோயின் அறிகுறிகளை கண்டுபிடித்து விட்டோமானால், அதை குணப்படுத்துவது மிக சுலபம். அறிகுறிகள் கண்டறியும் வரை தான் தாமதப்படும்.

நாள் முழுக்க கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும் கழுத்து, இடுப்பு எலும்பு தேய்மானத்தை விரைவில் குணப்படுத்த, இந்த வைத்திய முறை உதவுகிறது.அலோபதியை பொறுத்தவரை, வெறும் மருந்தால் மட்டுமே அனைத்து நோய்களும் குணப்படுத்தி விட முடியாது. ஆனால், ஓமியோபதி அப்படி அல்ல; அறுவை சிகிச்சை செய்யத் தேவையில்லை; மருந்து மூலமாகவே சரி செய்ய முடியும்.

பித்தப்பை கல், சிறுநீரக கல்லை கரைக்க முடியவில்லை எனில், மருந்து கொடுத்தே அதை வெளியேற்ற முடியும்.ஓமியோபதி மருத்துவ முறை, பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுத்தாது. சிலர் தவறான கருத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். கிட்னி பாதிப்புக்கே மருந்து கொடுத்து சரி செய்கிறோம்.

இதுவரை, யாருக்கும் ஓமியோபதி மருந்தால் பக்கவிளைவுகள் வந்ததில்லை.முள்ளை முள்ளால் எடுக்கும் தன்மை உடையது, இந்த மருத்துவம்.ஒத்த குணமுடைய மருந்து, மூலமாக குணப்படுத்துவது தான் ஓமியோபதி. அதிகமான கால்ஷியம், பொட்டாஷியம் உடலில் சேரும் போது தான், சிறுநீரக கல் உருவாகிறது.

அந்த கால்ஷியம், பொட்டாஷியம் அளவை குறைத்து, கல்லை உடைத்து வெளியில் கொண்டு வருவது தான், ஓமியோபதி மருத்துவம். மனநோய்க்கு கவுன்சிலிங் கொடுத்து, அதற்கேற்ற மருந்தை கொடுத்து சரி செய்யலாம்.

ஓமியோபதி மருந்தை மாதக்கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசிய மில்லை. சரியான நேரத்தில் காண்பித்து, சிகிச்சை பெறும் போது, ஓரிரு நாட்களே போதுமானது.நோய் முற்றிய நிலையில், ஓமியோபதியை நாடும் போது மட்டும், குணமாகும் வரை மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கும்; அதற்கும் அதிக மாதங்கள் தேவைப்படாது.

சர்க்கரை நோயை அடியோடு நிறுத்த, எந்த மருத்துவத்தாலும் முடியாது. உடலின் இன்சுலின் சுரக்கும் முறை மாறுபடும் போது தான், சர்க்கரை நோய் ஏற்படுகிறது. அலோபதியை விட, ஓமியோபதி மருந்தை சரியான அளவில் உட்கொண்டு, உடலுக்கு ஏற்ற உணவை அளவான முறையில் எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்பை குறைத்து, இன்சுலின் சரியான நிலையில் சுரக்க உதவும். தொடர்புக்கு: 94431 53634

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement