Advertisement

அறிவியல் ஆயிரம்

கோரை சீசன்
பாய் நெசவுக்குரிய மூலப்பொருள் கோரை, இது சைபெராசியே புல்லினத்தைச் சேர்ந்தது. நெல்லை மாவட்டத்தில் மாசி மாதத்தில் தான், கோரையை அறுவடை செய்வர். மருத திணைப் பாடல்களில் கோரையை 'சாய்' என்பர். மாசியில் கோரையை வெட்டி வந்து இரண்டாக பிளந்து 15 நாட்கள் வெயிலில் காயப் போடுவர். வாடிய கோரைப்புல்லை முடிச்சாகப் பிணைத்து தாமிரபரணி ஆற்றில் ஊற வைத்து பின் சாயமேற்றுவர். இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்திய பாய்களுக்கு தான் அமெரிக்கா, பிரிட்டனில் வரவேற்பு உள்ளது. நெல்லையில் உள்ள பத்தமடை, திருச்சியில் உள்ள முசிறியும், பாய் நெசவுக்குப் பெயர் பெற்ற நகரம்.

தகவல் சுரங்கம்



மாசி பழமொழி
'மாசி பூணல் பாசி படரும்' என்னும் பழமொழி, மாசி மாதத்தில் உபநயனம் என்னும் பூணுால் சடங்கினை நடத்தினால், தண்ணீரில் நின்று பூணலில் பாசி படரும் வரை அதிக எண்ணிக்கையில் காயத்ரி மந்திரத்தை, உச்சரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதைக் காட்டுகிறது. அதனால் தான் பெரும்பாலான 'உபநயனம்' மாசி மாதத்தில் நடைபெறும். 'மாசிச் சரடு பாசி படரும்' என்றும் சொல்வர் இந்த பழமொழியில் சரடு என்பது தாலியை குறிக்கின்றது. 'மாசிப் பிறையை மறக்காமல் பார்' என்ற பழமொழி, மாசி பிறையின் அழகை சிறப்பிக்கின்றது. 'மாசி நிலவும் வேசி உறவும் நில்லாது' என்று ஒரு பழமொழி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement