Advertisement

சொல்கிறார்கள்

லென்ஸ் அணிவதை தவிர்ப்பதே பாதுகாப்பானது!'கான்டாக்ட் லென்ஸ்' குறித்து கூறும், விழித்திரை சிறப்பு மருத்துவர் வசுமதி வேதாந்தம்:மீடியாவில் இருப்பவர்கள், நடிகையர், மாடல்கள், அழகுக்காக, 'கான்டாக்ட் லென்ஸ்' அணிவதுண்டு. அது அவர்களுக்கு தொழில் சார்ந்த தேவையாக இருக்கலாம். மற்றபடி தேவையே இல்லாமல், லென்ஸ் அணிவதை தவிர்ப்பதே பாதுகாப்பானது. கான்டாக்ட் லென்ஸ் போட்டால், பார்வை கெட்டுப் போகும் என, அர்த்தமில்லை. ஆனால், சில விஷயங்களை சரி வர பின்பற்றத் தவறினால், கண்களில் இன்பெக் ஷன் உண்டாகி, அதன் காரணமாக, பார்வை பிரச்னைகள் வரலாம். முக்கியமாக, லென்சை மிக ஜாக்கிரதையாக, முறையாக சுத்தப்படுத்த வேண்டும்.லென்ஸ் போடுவதற்கு முன், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சரியாக சுத்தப்படுத்தாத லென்சினுள், தேவையற்ற புரோட்டீன் சேர்ந்து விடும்; அது நல்லதல்ல.
லென்சை அதற்கான பிரத்யேக திரவம் கொண்டே சுத்தப்படுத்த வேண்டும். சிலர் எச்சில் தொட்டு சுத்தம் செய்வர்; அது மிக மிக ஆபத்தானது. லென்சை அகற்றியதும், அதற்கான பெட்டியில் பத்திரமாக வைக்க வேண்டும்; கண்ட இடங்களில் வைக்கக் கூடாது.லென்ஸ் அணிகிறவர்களை பார்க்கும் போது, அது எப்படியிருக்கும் என்ற ஆர்வத்தில் கையில் வாங்கிப் பார்க்க, பிறர் நினைப்பர். லென்சை அப்படியெல்லாம் ஒவ்வொரு கையாக மாற்றிக் கொண்டிருக்க கூடாது.லென்சு போட்ட பின்பே, மேக்கப் போட வேண்டும்; லென்சை அகற்றி விட்ட பின் தான் மேக்கப்பை நீக்க வேண்டும். லென்ஸ் அணிந்து, துாங்கக் கூடாது. குட்டித்துாக்கம் போடுவதானால் கூட, லென்சை எடுத்து விட்டுத் தான், துாங்க வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்கொரு முறை, லென்சை மாற்றி விட வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement