Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

மீறப்படும் பாதுகாப்பு சட்டங்கள்
இரு, நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு ஒரு வருடமானால் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் தேவை. இந்த சான்றிதழ் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். இந்த சான்றிதழ் பெற இரு சக்கர வாகனங்களுக்கு ஐம்பது ரூபாய் மட்டுமே செலவாகும். இந்த சான்றிதழை சரிபார்க்க போக்குவரத்து காவலருக்கு உரிமை உள்ளது. பெருநகரங்கள், மலைப்பகுதிகளில் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் தற்போது இந்த சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகின்றது. காரில் வளர்ப்பு மிருகமான நாய் போன்றவை அழைத்துச் செல்லப்பட்டால் பின் சீட்டில் தான் இருக்க வேண்டும். வளர்ப்பு மிருகத்திற்கும் சீட் பெல்ட் அவசியம்.

தகவல் சுரங்கம்



மாசி பெயர்க் காரணம்


'மா' என்றால் 'பெரிய', 'இறைவன்' என அர்த்தங்கள். இறைவனின் வழிபாட்டுக்கு உரிய மாதம் என்பதே மாசியின் அர்த்தம். வேத காலத்தில் மாசி மாதம் 'தபஸ்' என அழைக்கப்பட்டது. மாசி என்பதற்கு தமிழ் அகராதியில் ஒரு மாதம், மக நட்சத்திரம் வரும் நாள், மேகம் போன்ற அர்த்தங்கள் உள்ளன. மாசிக்காய், மாசி கருவாடு, மாசிப்பச்சை கொழுந்து, மாசி பத்திரி, மாசிமீன், நாகூரில் கிடைக்கும் மாசிவடை ஆகியவற்றுக்கும் மாசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்தியில் அம்மாவின் தங்கையை 'மாசி' என அழைப்பர். 'மாசி' என்றாலே சமஸ்கிருதத்தில் மாதம் என்று தான் அர்த்தம். மாசி மகத்தழகும், மகாமக குளத்தழகும் என ஒரு பழமொழி உள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement