Advertisement

பக்க வாத்தியம்

'பலத்தை காண்பிக்க, கட்சியை பிரிக்கிறாங்களே!'
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து, சமீபத்தில், தி.மு.க.,வினர், தோழமை கட்சிகளுடன் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். துாத்துக்குடியில், வடக்கு மாவட்டம் சார்பாக, எம்.எல்.ஏ., - கீதா ஜீவன், துாத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்; திருச்செந்துார், எம்.எல்.ஏ., - அனிதா ராதாகிருஷ்ணன், முத்தையாபுரத்தில், தெற்கு மாவட்டத்தின் சார்பாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர், தங்களின் பலத்தை காண்பிப்பதற்காக, ஒரு ஊரில் தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடத்தியதைப் பார்த்த உடன்பிறப்புகள், 'இவங்க பதவி சண்டையில, 'பவரை' காண்பிக்கிறதா நினைச்சு, கட்சியைப் பிரிக்கிறாங்களே...' என, புலம்பியபடி சென்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement